மேலும் அறிய

Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5! இந்த முறை கோமாளிகள் இவர்கள்தானா? வெளியான அசத்தல் ப்ரோமோ!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த சீசனில் தொகுப்பாளர்கள் மற்றும் கோமாளிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.  அதில், இந்த சீசனுக்கான தொகுப்பாளர்கள் மற்றும் கோமாளிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். 

குக் வித் மோமாளி சீசன் 5:

தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால், அதில் விஜய் டீவிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான்.

குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.  நடந்து முடிந்த நான்கு சீசன்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் - 5 விரைவில் தொடங்க உள்ளது.

கோமாளிகள் யார்?

இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அண்மையில் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இவருக்கு பதில் யார் நடுவராக இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் ப்ரோமோ வெளியானது.

அதில், செஃப் தாமுவுடன், மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடுவராக செயல்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இதனால், இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. அதோடு, இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், கோமாளிகள் யார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.  அதன்படி, இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்‌ஷன் ஆகியோர் தொகுத்து வழங்கும் நிலையில், குரோஷி, சுனிதா, புகழ், ராமர் ஆகியோர் கோமாளிகளாக களமிறங்குவதாக ப்ரோமோ மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி தெலங்கானாவில் திருமணம்? பரவும் தகவல்!

Ilayaraaja: கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை கேலி செய்த இளையராஜா!

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget