watch video : சாலையோரத்தில் கமல் போட்டோ.. நின்று வணங்கிய குக் வித் கோமாளி காமெடியன்! வைரல் வீடியோ!
குக்வித் கோமாளி புகழ் பாலாவும் இணைந்துக்கொண்டு, பிக்பாஸ் வீட்டின் தடுப்புச்சுவர் அருகே செய்த வேடிக்கையான நிகழ்வு ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் மாகாபா ஆனந்த். சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு குறிப்பாக விஜய் டிவில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களுடம் மிகவும் நெருக்கமானவர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர் , ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட சில நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற மாகாபா ஆனந்த் அங்கு தனது சக தொகுப்பாளரும் ,தோழியுமான பிரியங்காவை சந்தித்த நெகிழ்சியான தருணங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மாகாபா ஆனந்தும் , குக்வித் கோமாளி பாலாவும் இணைந்துக்கொண்டு, பிக்பாஸ் வீட்டின் தடுப்புச்சுவர் அருகே செய்த செயல் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
I really wished that the glass would vanish for a moment and priyu could get that much needed hug from Ma Ka Pa. you have all my heart 💛#PriyankaDeshpande
— BiggBossTamil ⚖️ (@BiggUnbiased) November 5, 2021
Soul of the house 🥺🥰#BiggBossTamil5
pic.twitter.com/0qM9XDXMMI
பிக்பாஸ் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கமல்ஹாசன் புகைப்படத்தின் முன்பாக, குக் வித் கோமாளி பாலா தீவிரமாக ஏதோ வேண்டிக்கொண்டிருக்கிறார்.தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் தரிசணம் செய்யும் பொழுது எப்படி காலணிகளை அருகில் கலட்டி வைத்துவிட்டு வேண்டுதல் செய்வார்களோ அதே போல பாலாவும் கமலை ஆண்டவராக நினைத்து வேண்டுதல் செய்கிறார். இதனை அருகில் இருக்கும் செக்கியூரிட்டி வினோதமாக பார்த்துக்கொண்டிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசனை நெட்டிசன்கள் ஆண்டவர் என அழைப்பது வழக்கம். அதனால்தனோ என்னவோ பாலா இப்படி செய்திருக்கிறார் போலும். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மாகாபா ஆனந்த் , “தீபாவளி வேண்டுதலின் போது “ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
மாகாபா ஆனந்த் பண்பலை தொகுப்பாளராக தனது கெரியரை ஆரமித்தார். ஆரம்ப காலத்தில் நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்ட மாகாபாவிற்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக சிவகார்த்திகேயன் சினிமாதுறையில் கால் பதித்த ஆரம்ப காலத்தில் , சின்னத்திரையை விட்டு விலகினார். அப்போது அவர் செய்துக்கொண்டிருந்த நிகழ்ச்சிதான் அது இது எது. அந்த நிகழ்சியில் சிவாவிற்கு மாற்றாக அறிமுகமானவர்தான் மாகாபா ஆனந்த்.தற்போது பல முன்னணி நிகழ்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம் உடையவர் மாகாபா என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள் .