மேலும் அறிய

Zoya : ஜோயா மிஸ்ஸிங்! கடந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் வந்த சந்தேகம்... தானாக வெளியேற்றிவிட்டாரா?

Zoyaa : கடந்த வாரம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜோயா கலந்து கொள்ளாததால் காரணம் என்ன?

சின்னத்திரை தான் மக்களின் மிக பெரிய என்டர்டெயின்மென்ட் ஆப்ஷனாக இருந்து வருவதால் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அதிலும் ஏதாவது ஒன்று நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால் அடுத்தடுத்த சீசன்கள் என தொடர ஆரம்பித்துவிடும். அப்படி முதல் சீசன் முதல் இன்று வரை சின்னத்திரை ரசிகர்களை ஆக்கிரமித்த ஒரு நிகழ்ச்சி தான் வார இறுதி நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி.

கடந்த நான்கு சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சமையல் கலந்த காமெடி ஷோவின் ஐந்தாவது சீசன் தற்போது கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

Zoya : ஜோயா மிஸ்ஸிங்! கடந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் வந்த சந்தேகம்... தானாக வெளியேற்றிவிட்டாரா?

ஆனால் 'குக்கு வித் கோமாளி' ஐந்தாவது சீசன் தொடங்கிய நாள் முதல் எக்கச்சக்கமான பிரச்சனைகளுடன் தான் துவங்கியது. தயாரிப்பாளர் தொடங்கி நடுவர், கோமாளி என பலரும் விலக ஒரு மாதிரியான எதிர்பார்ப்புடன் தான் குக்கு வித் கோமாளி சீசன் 5 துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜோயா. இவர் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் சில ஷார்ட் பிலிம்களை இயக்கியுள்ளார். தற்போது கூட படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஜோயாவின் வெகுளித்தனமான பேச்சும், செயல்பாடுகளையும் பார்க்கும் போது இவர் உண்மையிலேயே குக்கு தானா அல்லது கோமாளியா என குழப்பம் ஏற்படும். 

சரியாக சமைக்க தெரியாதவர் என்றாலும் இன்று வரை நிகழ்ச்சியில் கடுமையாக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் கடத்த வாரம் சின்னத்திரை நடிகர் வசந்த் வாசி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். நன்றாக சமைக்க தெரிந்த வசந்த் வாசி வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 

Zoya : ஜோயா மிஸ்ஸிங்! கடந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் வந்த சந்தேகம்... தானாக வெளியேற்றிவிட்டாரா?

இது தொடர்பாக சில மீம்ஸ் சோஷியல் மீடியா எங்கும் வைரலானது. சமைக்க தெரியாத ஜோயா உள்ள இருக்கும் போது நல்ல சமைக்க தெரிந்த வசந்த் வாசி வெளியேற்றப்பட்டாரே என சிலர் விமர்சனம் செய்தனர்.

அது சம்பந்தமாக ஜோயா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ”கதறுறவங்க கதறட்டும்” என போஸ்ட் செய்து இருந்தார். 

கடந்த வார குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜோயா கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் ஜோயா தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது? 

அதற்கு பதிலளித்த ஜோயா தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால்தான் கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறேன். அதனால் அடுத்த வார எபிசோடில் நிச்சயம் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார் ஜோயா. 

தலைப்பு செய்திகள்

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!

Embed widget