Cinema Headlines: ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமண ஃபோட்டோஸ்.. கமலின் மிரட்டல் தோற்றம்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.
மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமய்யா மகன் உமாபதி இருவரது திருமணம் நேற்று (ஜூன்.10) இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆண்டு இருவருக்கும் காதல் எனத் தகவல்கள் பரவத் தொடங்கிய நிலையில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவர்களது க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
கல்கி ட்ரெய்லரில் 3 நொடிகளில் அலறவிட்ட கமல்ஹாசன்.. படத்தில் இவ்வளவு நேரம் தான் வருவாரா!
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், பசுபதி உள்ளொர்ட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள 'கல்கி 2898AD' படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ட்ரெய்லரில் சில நொடிகள் மட்டுமே தோன்றும் அவரது கதாபாத்திரம் கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது. மேலும் கல்கி முதல் பாகத்தில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 19 நிமிடங்களுக்கும் இரண்டாவது பாகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் ஸ்க்ரீனை ஆக்கிரமிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சார்லி வீட்டில் கெட்டிமேளம்... வாழ்த்திய முதலமைச்சர் - வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் கலக்கிய ஒரு நடிகர் சார்லி, தன் மகன் அஜய் தங்கசாமியின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் அசுரன், ராட்சசன், யானை, தண்டட்டி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் நான்கு சீசன்களை இயக்கிய பார்த்திவ் மணியை அம்மு அபிராமி காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பார்த்திவ் மணியின் பிறந்தநாளை முன்னிட்டு, “ஹேப்பிஸ்ட் பர்த்டே டியர் பார்த்திவ் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி" என தங்கள் காதலை உறுதி செய்யும் வகையில் அம்மு அபிராமி பதிவிட்டுள்ளார்.