மேலும் அறிய

Cinema Headlines: குட் பேட் அக்லி அப்டேட்: பிரதமர் மோடியைக் கலாய்த்த தியாகராஜா குமாரராஜா: சினிமா ரவுண்ட்-அப்!

Cinema Headlines: சினிமா வட்டாரங்களில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்

அஜித், விஜய் படம் பார்த்துதான் டாடா படத்திற்கு தயாரானேன்: வெளிப்படையாக பேசிய கவின்

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் நாயகனாக வெற்றிகரமாக தன் பயணத்தை முன்னெடுத்துள்ளார் கவின். இளன் இயக்கத்தில் இவர் நடிக்கும் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்டார் படத்துக்கு தான் தயாரானது குறித்து கவின் சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்துள்ளார். அஜித் நடித்த முகவரி படத்தையும் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படங்களைப் பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டதாக கவின் தெரிவித்துள்ளார்.

மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!

தமிழ் சினிமாவில் பலரும் பார்த்து ரசிக்கும்  உறவுகளில் ஒன்று உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கும் உள்ள நட்புடன் கூடிய தந்தை - மகள் உறவு. தனது மகளுடன் பேசும்போது நண்பன் ஸ்தானத்தில் பெரும்பாலும் உரையாடுவார் கமல். அந்த வகையில்  ராஜ்கமல் நிறுவனம் சமீபத்தில் பகிர்ந்துள்ள நேர்காணலில், தன்னை அப்பா கமல் மிஸ் செய்வதுண்டா எனக் கேள்வி எழுப்பினார். “நான் மிஸ் பண்ணுவேன். எங்காவது ரோட்டில் குழந்தைகள் நடந்து போவதை பார்த்தால் உடனே உன் ஞாபகம் தான் வரும்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

அவர் தமிழ் கத்துக்கணும்; அதற்கான நேரத்தை இந்த தேர்தல் கொடுக்கனும்: மோடியை கலாய்த்த இயக்குநர்

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி தன் இரண்டே படங்களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தியாகராஜா குமாரராஜா. சமூகத்துக்கான படங்கள் எடுத்தாலும், தன் படங்களில் குமாரராஜா அரசியல் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் கேலி செய்து தியாகராஜா குமாரராஜா பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடிய கையோடு ஷூட்டிங் தொடக்கம்.. அஜித்தின் குட் பேட் அக்லி அப்டேட்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் பற்றிய முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தனது பிறந்தநாளை வரும் மே 1ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அன்று அஜித்தின் பழைய ஹிட் அடித்த படங்களை ரீரிலீஸ் செய்வதற்கான பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வருகின்றன. மற்றொருபுறம் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்றும் வெளியாகவுள்ளது.

நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் கால் பதித்து அங்கு பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு இன்று உச்ச நட்சத்திரமாக கொடிகட்டிப் பறக்கும் நடிகை சமந்தா தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். தன் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்புகள், மயோசிட்டிஸ் நோய் என பல தடைகளைக் கடந்து இன்றும் வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் சமந்தா திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாகத் திகழ்ந்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Embed widget