மேலும் அறிய

Tamil movie releases | இன்று வெள்ளிக்கிழமை... தமிழில் 5 படம் ரிலீஸ்.. இதுதான் லிஸ்ட்! ரெடி ஸ்டார்ட்..

Kollywood Movies Releasing this Week: கோலிவுட்டில் இன்று 5 திரைப்படங்கள் ரிலீஸ். இதுதான் அந்த லிஸ்ட்...

Friday Movie Release Tamil, Sep 24: கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பல மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகள் கடந்த மாதம் முதல் திறக்கப்பட்டன. ஆனால் இப்போது தான் புதுப்படங்களில் வரத்து தொடங்கியுள்ளது. அதேவேளையில் ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கோலிவுட் 5 திரைப்படங்களை களம் இறக்குகிறது.  அவை என்னென்ன?

1.ப்ளான் பண்ணி பன்னணும்
ரியோராஜ், ரம்யா நம்பீசன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ப்ளான் பண்ணி பண்ணனும். வட சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளராக ரியோவும், சிறு நகரத்தில் இருந்து வரும் பெண்ணாக ரம்யாவும் நடித்துள்ளனர். ரம்யாவும் ஐடி வேலை பார்ப்பதாகவே இருக்கிறது. இந்தப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். 

2.சின்ரல்லா


Tamil movie releases | இன்று வெள்ளிக்கிழமை... தமிழில் 5 படம் ரிலீஸ்.. இதுதான் லிஸ்ட்! ரெடி ஸ்டார்ட்..
பலக்கலவை திரைப்படமாக சின்ரல்லா உருவாகியுள்ளது. நடிகை ராய் லட்சுமி இப்படத்தில் 3 லுக்கில் உள்ளார். ராக் ஸ்டார், கிட்டாரிஸ்டாகவும் நடித்துள்ளார். இப்படத்தை வினோத் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். எஸ் ஜே சூரியாவிடம் இசை படத்தின் போது இணை இயக்குநராக இருந்த வினோத் இப்படத்தை தன்னுடைய அறிமுக திரைப்படமாக இயக்கியுள்ளார். பேண்டசி, த்ரில், மியூசிக்கல்,ட்ராமா, திகில் என இப்படத்தில் அனைத்தும் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க > >அஜித்திற்கு உலகம் சுற்ற ஐடியா கொடுத்த பெண்... யார் இந்த மரல் யாசர்லூ?

3.சூ மந்திரகாளி
ஈஸ்வர் கொற்றவை எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சூ மந்திரகாளி. சேலம் மாவட்டத்தின் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவமாக இப்படம் நகர்கிறது. காமெடி கலந்த திகில் அனுபவமாக இது இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா, கிஷோர் தேவ், கோவிந்த் மயோன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

4.பேய் மாமா


Tamil movie releases | இன்று வெள்ளிக்கிழமை... தமிழில் 5 படம் ரிலீஸ்.. இதுதான் லிஸ்ட்! ரெடி ஸ்டார்ட்..
காமெடி திகில் திரைப்படம் என்ற வழக்கமான கான்செப்டை கையில் எடுத்திருக்கும் திரைப்படம் பேய் மாமா. நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் போன்றவர்கள் நடித்துள்ளனர். சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கியுள்ளார். வைரஸ் மூலம் கொலை செய்யப்பட்ட குடும்பம் கொலை செய்தவர்களை, திருடனான யோகி பாபு உதவியுடன் பழி வாங்குகிறது. இக்கதையை காமெடி கலந்து கொடுத்துள்ளனர்.

5.சின்னஞ்சிறு கிளியே
சபரிநாதன் முத்துபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. செந்தில்நாதன், சந்த்ரா நாயர், அர்ச்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேற்கத்திய மருத்துவம் மற்றும் கல்வியில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில் இந்திய மருத்துவம் மற்றும் கல்வியின் பெருமையை மீட்டெடுப்பது குறித்து பேசும் கதையாக இது இருக்குமென தெரிகிறது

இதையும் படிங்க > >PM Modi US Visit: இது மோடியின் விமானம்.. அதுவே அதன் பிரதானம்!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Embed widget