Watch video : அமரன் டீசரை 'தி கோட்' உடன் கொண்டாடுங்கள்! இடைவேளையில் திரையிடப்பட்ட டீசர்
Watch video : 'தி கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ என்ட்ரி கொடுத்ததை அடுத்து படத்தின் இடைவேளையில் அமரன் டீசர் திரையிடப்பட்டது.
![Watch video : அமரன் டீசரை 'தி கோட்' உடன் கொண்டாடுங்கள்! இடைவேளையில் திரையிடப்பட்ட டீசர் Celebrating Amaran teaser in The Goat Interval has surprised the audience Watch video : அமரன் டீசரை 'தி கோட்' உடன் கொண்டாடுங்கள்! இடைவேளையில் திரையிடப்பட்ட டீசர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/05/03c9dff02dedfe49d79550aedebf30841725535089165224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் பான் இந்தியன் படமாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. ஏஜிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
வெங்கட் பிரபு படங்களில் எப்போதுமே ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் 'தி கோட்' படத்தில் விஜயின் டி ஏஜிங் காட்சிகள், AI மூலம் விஜயகாந்த் என்ட்ரி இப்படி பல புது விஷயங்கள் இருந்தாலும் கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயன் என்ட்ரி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
மேலும் ஸ்பெஷல் சர்ப்ரைஸாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர், 'தி கோட்' படத்தின் இடைவேளையில் ஒளிபரப்பப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
From the Battlefield to Big screen!
— Raaj Kamal Films International (@RKFI) September 5, 2024
Celebrate #Amaran teaser with #GOAT #AMARANxGOAT #AmaranOctober31 #TheGreatestOfAllTime #AmaranDiwali#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan… pic.twitter.com/xiCwXAPxbV
'அமரன்' டீசரை 'தி கோட்' உடன் கொண்டாடுங்கள்! என கேப்ஷனுடன் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)