Saranya Ponvannan: கொலை மிரட்டல் வழக்கில் சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்.. நடந்தது என்ன?
Case on Saranya Ponvannan : நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி என்ற பெண் வசித்து வருகிறார்.
Case On Saranya Ponvannan : பக்கத்து வீட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சரண்யா பொன்வண்ணன். அம்மா என்றால் இவரைப் போல இருக்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு சினிமாவில் வலம் வரும் இவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி என்ற பெண் வசித்து வருகிறார்.
இவரது வீட்டு கேட் சுமார் 20 அடி நீளம் உள்ளது. இதனிடையே நேற்று மாலை தனது வீட்டில் கேட்டை ஸ்ரீதேவி திறந்துள்ளார். அப்போது அது சரண்யா பொன்வண்ணனின் கார் அவரது வீட்டு வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி வீட்டு கேட்டானது அவரது காரை உரசுவது போல சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா பொன்வண்ணன் ஸ்ரீதேவி குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
#JUSTIN | கொலை மிரட்டல் வழக்கில் சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்https://t.co/wupaoCz9iu | #TamilCinema #saranyaponvannan #TamilNews pic.twitter.com/X6WgcOqNwk
— ABP Nadu (@abpnadu) April 1, 2024
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி வீட்டுக்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதற்கு பதிலடியாக சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தினரும் புகாரளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி அளித்துள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் பார்க்கிங் என்ற படம் கார் பார்க்கிங் பிரச்சினையால் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசியது. அப்படி ஒரு சம்பவம் சரண்யா பொன்வண்ணனுக்கு நடந்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.