மேலும் அறிய

Indian 2 | கமல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கியர் போட்டு கிளம்பும் இந்தியன் 2!

பின்னர் கொரோனா ஊரடங்கும் தொற்றிக்கொள்ள அட என்னாடா இது இந்தியன்2 படம் வெளியாகுமா இல்லை அவ்வளவுதானா? என ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.இப்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாம்.

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன் . இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், ஆல் செட்...லைட்..கேமரா..ஆக்‌ஷனுடன் கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன்தான் கதாநாயகநாக நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே..இந்நிலையில் படம் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் நிலை தடுமாறி கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த சூழலில் , தயாரிப்பு நிறுவனமான லைகா ஷங்கர் படத்தை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.அதற்கு ஷங்கர் தரப்பும் சில காரணங்களை கூறி எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் சூழலில்தான்  அரசியல் களம் கண்டார் கமல் , பின்னர் கொரோனா ஊரடங்கும் தொற்றிக்கொள்ள அட என்னாடா இது இந்தியன்2 படம் வெளியாகுமா இல்லை அவ்வளவுதானா? என ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.


Indian 2 | கமல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கியர் போட்டு கிளம்பும் இந்தியன் 2!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் விசாரணைக்கு வந்த இந்தியன் 2 வழக்கில், தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் தரப்பு இரண்டும் சுமூகமான நிலையை எட்டியதாக தெரிகிறது. மேலும் ஷங்கர் மற்ற படங்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு , முதலில் இந்தியன் 2 படத்திர்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தை வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் மறுதுவக்கம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கமல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.


Indian 2 | கமல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கியர் போட்டு கிளம்பும் இந்தியன் 2!
 முன்னதாகவே இது குறித்து வெளியான செய்தியில் அடுத்த மாதம் இடையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் 50 சதவிகித படப்ப்பிடிப்புகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை 100 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் ஷங்கர். படத்தில் ஏற்கனவே  முக்கியமான வேடங்களில் ஒப்பந்தமாகியிருந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரும் சமீபத்தில் உயிரிழந்ததால் அவர்களின் இடத்தை நிரப்ப சில மாறுதல்களை செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்தியன் 2 படத்தில்  கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்கள் தவிர சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ராக் ஸ்டார் அனிருத். ஏற்கனவே படத்தில் சில போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget