மேலும் அறிய

Bombay Jayashree: லண்டனில் சிகிச்சை..பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை அப்டேட்.. ரசிகர்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

உடல்நிலை அப்டேட்:

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். அதன்படி,  ”பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை பெற்றார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதால், அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம் தனிமை மற்றும் உங்கள் ஆதரவைக் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பாதிப்பு:

கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பாடகியுமான 58 வயதான பாம்பே ஜெயஸ்ரீ,  இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது.  லண்டன், லிவர் பூலில் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, நீண்ட நேரமாக வெளியே வராததால் உடனிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுயநினைவின்றி கோமா நிலையில் மயங்கி கிடந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குடும்பத்தினர் கொடுத்த தகவல்

இதுதொடர்பாக அவரது குடும்பத்தின் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்,  பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இருப்பினும், சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி.  மேலும், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நலம் சீராக உள்ளது. இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான தனிப்பட்ட நேரத்தை வழங்குமாறும் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

திரையுலகி பாம்பே ஜெயஸ்ரீ:

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக  தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அதிலும் மின்னலே படத்தில் இடம்பெற்ற 'வசீகரா', காக்க காக்க படத்தில் இடம்பெற்ற 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', தாம் தூம் படத்தில் இடம்பெற்ற 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

மத்திய அரசின் 'பத்மஸ்ரீ', தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ சினிமாவில் பாடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!
அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Embed widget