பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை - மகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு !

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

FOLLOW US: 

பாலிவுட் திரைப்படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியவர் ஸ்ரேயா கோஷல். இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இவர் பல பாடல்கள் பாடியிருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'முன்பே வா' பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் .  இவர் சிறந்த பிண்ணனி பாடகிக்கான தேசிய விருதை 4 முறை வென்றுள்ளார்.பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை - மகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு !

அத்துடன் சிறந்த பாடகிக்கான ஃபிளிம்பேர் விருதை 6 முறை வென்றுள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிலாத்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஸ்ரேயா கோஷல் தனது சமூகவலைதள பக்கத்தில் தான் கர்ப்பிணியாக இருக்கும் நிழற்படத்தை பதிவிட்டிருந்தார். அது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இன்று இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரேயா கோஷல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "இன்று மதியம் கடவுளின் அருளால் எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நானும் என்னுடைய கணவர் ஷிலாத்தியாவும் மற்றும் என்னுடைய குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் எங்களது நன்றி" எனத் தெரிவித்துள்ளார். 

Tags: West Bengal singer shreya Ghoshal Baby boy Shiladithya Bollywood singer Munbe vaa

தொடர்புடைய செய்திகள்

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு