HBD Shahrukh Khan : பாலிவுட் கிங் கான் பிறந்தநாள் இன்று... பர்த்டே பரிசாக "பதான்" டீசர்... ஆரவாரமாக கொண்டாடும் ரசிகர்கள்
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என செல்லமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என செல்லமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் நாடி துடிப்பு :.
ஒரு சின்னத்திரையில் தொடங்கிய இந்த ஹீரோவின் பயணம் வெகு சிறப்பாக அமைந்துள்ளது. பல வெற்றி படங்களில் நடித்த இவர் இதுவரையில் 14 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து ரசிகர்களை மொத்தமாக ஆக்கிரமித்தார். இவர் இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமானவர். இன்றும் அதே சுறுசுறுப்புடனும் மாஸ் காட்டும் இந்த ஹீரோ பலரின் வழக்கைக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர்.
Inspiring billions across the globe with his words is something which only megastar @iamsrk can do! ❤
— Just a Fan (@Srks_devote) November 1, 2022
Happy birthday to the best lover in the world! Keep shining! ⭐#ShahRukhKhan | #SRK | #HappyBirthdaySRK | #HappyBirthdayShahRukhKhan | #SRKDay | #SRK57 | #KingKhan | pic.twitter.com/w9ebH9zAc4
பிறந்தநாள் பரிசாக "பதான்" டீசர் :
ஷாருக்கான் பிறந்த நாளான இன்று அவரின் நடிப்பில் உருவாகியுள்ள "பதான்" படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார் தீபிகா படுகோன். ஜனவரி 25ம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ஷாருக்கான் பிறந்தநாள் பரிசாக அவரின் பிறந்தநாள் அன்றே அப்படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
Pathaan teaser on 2nd November confirmed 💜
— demonation Army (@ArmyDemonation) November 1, 2022
A SRk film's proper teaser almost 4 years😭
6 days to go for the official teaser of his comeback film , we hv come a long way guys 💜#ShahRukhKhan𓀠 #Pathan pic.twitter.com/YzB6QhI6Ff
"ஜவான்" ஸ்பெஷல் ஏதாவது உண்டா ?
அந்த வகையில் நமது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ முதன்முறையாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை இயக்கியுள்ள திரைப்படம் "ஜவான்". இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் பிறந்தநாளை ஒட்டி இப்படம் குறித்த புதிய அப்டேட் ஏதாவது வெளியாகும் என மிகுந்த ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளை பாலிவுட் ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். ஹேப்பி பர்த்டே ஷாருக் ஜி !!!