மேலும் அறிய

Bigg Boss: ‘அரிப்பை தீர்த்துக்கொள்ள பிக்பாஸ்...’ மன்சூர் அலிகான் தடாலடி சர்ச்சை பேச்சு!

“ அரிப்பை தீர்த்துக்கொள்ள இது ஒரு நிகழ்ச்சி. மேற்கிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற நிகழ்ச்சி.” என பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி தனது கருத்தை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த மன்சூர் அலிகான், பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கேட்ட போது, நானும் அங்கு போகலாம் என்று இருந்தேன். என்னை கூப்பிட்டார்கள். ஆனால் நான் கேட்ட சம்பளத்தை அவர்கள் தரவில்லை என்று பேசினார்.

தமிழ் சினிமாவின் பிரபல வில்லனான மன்சூர் அலிகானை, படத்தில் டெரர்ராக பார்த்திருப்போம். இவர் நிஜமாகவே ரொம்ப மோசமானவர் என்றும் சிலர் நினைத்திருப்பார்கள் ஆனால், நிஜ வாழ்க்கையில் இவர் அப்படி கிடையாது. வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர். சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலை கேட்டாலே இவர் நியாபகம்தான் வரும். அப்படி பட்டவர், டான்ஸ் வீடியோ ஒன்றை யூடியூபில்வெளியிட்டு வைரல் ஆனார். அதன் பிறகு இவரின் சர்ச்சை நிறைந்த காமெடி பேச்சு பட்டி தொட்டியெங்கும் பரவியது. அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Bigg Boss: ‘அரிப்பை தீர்த்துக்கொள்ள பிக்பாஸ்...’ மன்சூர் அலிகான் தடாலடி சர்ச்சை பேச்சு!

சமீபத்தில், ஒரு தனியார் யூடியூப் சேனலிற்கு பேட்டி கொடுத்துள்ளார். தொகுப்பாளர், பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து கேள்வி கேட்ட போது அவர் கூறியதாவது, “என்னையும் கூப்பிட்டாங்க..நான் ஒரு சம்பளம் கேட்டேன். அவர்கள் குடுக்கவில்லை. ஏதோ ஆம்பள வேஷம், பொம்பள வேஷம் போட சொல்லுவாங்கலாம். பாட்டு பாடனுமாம்.. எழுந்துகொள்ளும் போது டான்ஸ் ஆடனுமாம்... சினிமாவில் பண்ணுவதை இதில் பண்ண வேண்டியதுதான். எனக்கு நிறைய சம்பளம் கொடுத்தால் நானும் அங்கு போவேன். அதில் என்ன தப்பு இருக்கிறது. ஒரு ரூமில் பத்து நபர்களை போட்டால் என்ன செய்வாங்க.. அதைதான் நானும் செய்ய போகிறேன். ஆம்பள ஆம்பள வேலையை பாப்பாங்க.. பொம்பள பொம்பள வேலையை பாப்பாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் வேற சேனலை பாருங்கள். அதையே பாக்கணும் அதையே நோண்டனும்.. ஏன் அப்படி இருக்கீங்க. நான் வருகிறேன் அந்த நிகழ்ச்சிக்கு .. அவர்கள் கையை அறுத்துக்கொண்டால், நான் காலை அறுத்துக்கொள்கிறேன். 

Bigg Boss: ‘அரிப்பை தீர்த்துக்கொள்ள பிக்பாஸ்...’ மன்சூர் அலிகான் தடாலடி சர்ச்சை பேச்சு!

மக்களுக்கு அடி மனசில் ஒரு குணம் இருக்கு. பக்கத்து வீட்டை எட்டி பார்ப்பது, சண்டை நடந்தால்  என்ன நடக்குது என்று பார்ப்பது.. குளிச்சிட்டு இருந்த அதை எட்டிப்பார்ப்பது... இதையெல்லாம் பண்ணுவாங்க. அந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள இது ஒரு நிகழ்ச்சி. மேற்கிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற நிகழ்ச்சி. உங்களுக்கு என்ன பிரச்சனை அவங்க நடத்திட்டு போறாங்க. நான் பார்க்கவில்லை அதை.. தூக்கம் வந்துவிடும்." இப்போது, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ளதாக பல வதந்திகள் பரவி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் : 

Bigg Boss: ‘அரிப்பை தீர்த்துக்கொள்ள பிக்பாஸ்...’ மன்சூர் அலிகான் தடாலடி சர்ச்சை பேச்சு!

போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க : Sardar 2: சர்தாருக்கு கிடைத்த வரவேற்பு.. ‘இரண்டாம் பாகம் எடுக்கப்போறோம்’ - கார்த்தி பேட்டி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!

Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

Embed widget