Biggboss Tamil 5 | நான் விளையாடவே ஆரம்பிக்கல.. விளையாட ஆரம்பிச்சேன்னா ஒருத்தனையும் விடமாட்டேன் - அபிஷேக்கின் சவடால்
Biggboss Tamil 5 | அக்ஷராவைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பாவனியிடம், நான் ஆரம்பிக்கல.. விளையாட ஆரம்பிச்சா விடமாட்டேன், வெளியேத்திடுவேன் என அபிஷேக் சவடால் விட்டார்
![Biggboss Tamil 5 | நான் விளையாடவே ஆரம்பிக்கல.. விளையாட ஆரம்பிச்சேன்னா ஒருத்தனையும் விடமாட்டேன் - அபிஷேக்கின் சவடால் Biggboss Tamil 5 Biggboss Tamil 5 Episode 14 Abishek speaks to pavani Biggboss Tamil 5 | நான் விளையாடவே ஆரம்பிக்கல.. விளையாட ஆரம்பிச்சேன்னா ஒருத்தனையும் விடமாட்டேன் - அபிஷேக்கின் சவடால்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/b2b50898c5d1fe28037a9124999a43cd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Biggboss Tamil 5 | Episode 14
இன்று விஜய் டிவி பிக்பாஸில், 14-வது எபிசோட். நாடகம் நடப்பதற்கு முன்பாக, தன்னை சீனியர் என்ற முறையில் பாடச்சொல்லியிருக்கவேண்டும் என்று சின்னபொண்ணு சொல்கிறார். உடனடியாக நாடகம் நடிப்பதற்காக காத்திருந்தவர்கள் டிஸ்டர்ப் ஆனார்கள். ”சின்னப்பொண்ணு அம்மா இதை ஏன் பெருசுபடுத்துறாங்க. இதுக்கான குறையை ஏத்துக்கலாம். ஆனா இது திட்டமிட்டு செய்யல. நீ போய் மன்னிப்பு கேக்காத. இயல்பா சொல்லிட்டு வா” என்கிறார் ப்ரியங்கா.
உடனே அபிஷேக், “நீ என் அம்மாதான. உன்கிட்ட நாங்க ஏன் இப்படி பண்ணப்போறோம். நீ கோச்சுக்கிட்டதும், நடிக்க வந்தவங்க டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. மக்கள் ஒன்னும் நினைக்கமாட்டாங்க. நிம்மதியா இரு. எப்போவும் மக்கள் என்ன நினைச்சுக்கிட்டு இருப்பாங்கன்னு பேசிக்கிட்டு இருக்காத” என்றார். நடுவில் சண்டையை விலக்கிவிடும் ஸ்டைலில் வந்த அக்ஷ்ராவையும், ஐக்கி பெர்ரியையும் அபிஷேக் சண்டையே இல்லை. இது மகனோட வைராக்கியம் என பேசி ஆஃப் செய்தார். அபிஷேக் எதுக்கு இப்படி கத்தணும் என கவுண்ட்டர் கொடுத்தார்கள் ஐக்கியும், அக்ஷராவும்.
அபிஷேக்கிடம் எதையோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார் பாவனி. உடனே அபிஷேக் சத்தமான குரலில், “இன்னும் நான் விளையாடவே ஆரம்பிக்கல. நான் ஆரம்பிச்சா ஒருத்தனையும் விடமாட்டேன். வெளியேத்திடுவேன்” என்கிறார். அடுத்த நாள், மதுமிதாவிடம், ”அக்கறையாதான் இருக்கான், ஆனா அது என் மனச டிஸ்டர்ப் பண்ணுது. இது கேம் ப்ளானா இருக்கலாமோ” என்கிறார் பாவனி. அந்த நேரத்தில் கேமரா அபினயைக் காட்டுகிறது. (அபினய் குடும்பஸ்தன் ப்பா ஏய்)
அதன்பிறகு, அபினயைக் கூப்பிட்டு நான் உன்னை அண்ணன் மாதிரிதான் நினைக்கிறேன் என பாவனி சொல்கிறார். உடனே அபினய் அதில் என்ன சந்தேகம், நீங்க தேவையில்லாம யோசிக்க தேவையில்ல என சந்தேகத்தைக் க்ளியர் செய்கிறார்.
கமல் லிவிங் ரூமைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். சின்னப்பொண்ணு, தாமரைச்செல்விக்கு இடையில் வந்த கிராமியமா, நாடகமா சண்டையைப் பற்றிப் பேசினார். சின்னப்பொண்ணு ஒன்றுமே நடக்காதது போல சமாளித்தார். அக்ஷராவின் கதையைப்போல, தனக்கும் அப்பா இடத்தை எடுத்துக்கொண்ட அண்ணன் எனக்கும் இருக்கிறார் என்றார் கமல்.
ப்ரியங்காவின் கதை மூலம் மனிதர்களிடம் இருக்கும் Apathy தெரிந்ததாகச் சொன்னார். இசைவாணி பேசும்போது, “எனக்கு ஒரு சில விஷயம் புரியவில்லை. ஒதுக்கப்படுறதா உணர்றேன்” என்றார். ”வந்ததுல இருந்து செட்டா இருக்கும்போது, நானே எழுந்து வந்துருவேன்” என்றார்.
வருண், அபிஷேக், மதுமிதா, நாடியா, சின்னப்பொண்ணு ஆகிய ஐவரில் யாரோ ஒருவர் நாளை வெளியேறப்போகிறார்கள். யார் அவர்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)