Bigg Boss 5 Tamil: சிலரது சுயரூபம் விஸ்வரூபம்.. புத்தாண்டில் புதிர்போடும் பிக்பாஸ் கமல்.!
‘Ticket to Finale’ டாஸ்க்கின் கடைசி போட்டியில் சிபியும், அமீரும் போட்டியிட்டதில், வெற்றி பெற்று முதல் போட்டியாளராக அமீர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்

Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இந்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடினர். இதன் கடைசி போட்டியில் சிபியும், அமீரும் போட்டியிட்டதில், வெற்றி பெற்று முதல் போட்டியாளராக அமீர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். அதனை அடுத்து 90வது நாளான இன்றைய எபிசோடின் முதல் ப்ரொமோ வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை என்பதால், மக்கள் முன் தோன்றி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார் கமல். “பாதியில் வந்த அமீர் இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறார். கலகலப்பாய் இருந்த வீடு கைகலப்பு வரை வந்திருக்கிறது. சிலரது சுயரூபம் விஸ்பரூபம் எடுத்திருக்கிறது. இன்று அவர்களுடன் பேசலாம்” என பேசி முடிக்கிறார். முழு விவரம் இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
ப்ரொமோ:1
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/5yB3SwK8s0
— Vijay Television (@vijaytelevision) January 1, 2022
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

