மேலும் அறிய

Pallavi Prashanth: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கைது.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன நடந்தது?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று பிக்பாஸ். இதனை தமிழில் விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் டைட்டில் வின்னர் பல்லவி பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயது வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு  நிகராக ரியாலிட்டி ஷோக்கள் கவர்ந்திழுத்து வருகின்றன. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானால் தவறாமல் நம்மில் பலரும் டிவி முன்னால் ஆஜராகி விடுவோம். அப்படியே நிகழ்ச்சியை தவற விட்டு விட்டால் தற்போது ஓடிடி தளங்களில் எப்போது வேண்டுமானால் பார்த்துக் கொள்ளும் வசதியும் வந்துவிட்டது.  

இதனிடையே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று பிக்பாஸ். இதனை தமிழில் விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதேபோல் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 7வது சீசன் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக பல்லவி பிரசாந்த்  டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு விருதும், ரூ.35 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

தெலங்கானாவில் விவசாயம் செய்து வரும் பல்லவி பிரசாந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடினர். அதேசமயம் இந்த சீசனில் பல்லவி பிரசாந்த் அதிகமாக கிண்டல் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியான அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் போட்டியாளர்களை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.  இப்படியான நிலையில் அவ்வாறு அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் கூட்டிய ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2வது வின்னராக தேர்வு செய்யப்பட்ட அமர்தீப்பின் காரை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இறுதிப்போட்டி வரை வந்த அஸ்வினி, கீத்து கார்களும் தாக்கப்பட்டது. இதில் அமர்தீப் அந்த தாக்குதலை பெரிதும் பொருட்படுத்தாத நிலையில், மற்ற இருவரும் ஜூப்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கார்களை தாக்கியவர்கள் பல்லவி பிரசாந்தின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டது. 

மேலும் அமர்தீப்புடன் காரில் அவரது தாயார் மற்றும் மனைவியும், நடிகையுமான தேஜஸ்வினி இருந்த நிலையில் நடந்த தாக்குதல் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஸ்வினி,கீத்து கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்லவி பிரசாந்த், அவரது சகோதரர் மனோகரை முதன்மை குற்றவாளியாக சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து பல்லவி பிரசாந்தை கைது செய்தனர். அன்னபூர்ணா ஸ்டூடியோவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு பிறரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget