Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பேசியது பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமே என்றும், வேறு யாரையும் பேசவில்லை என்றும் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
குவிந்த கண்டனம்:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மத்தியில் சட்டசபை போல வாக்குவாதம் நடந்தது. இதுதொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி ஆளுங்கட்சியாக வாக்குறுதியைத் தெரிவித்துவிட்டு ஓடி ஒளிந்து கொள்வது என்று அவர் பேசிய கருத்துக்கு தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், விஜய் சேதுபதி கடந்த திமுக ஆட்சியில் திமுக-விற்கு ஆதரவாக பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து, அவரை மிக கடுமையாக விமர்சித்து விமர்சனங்கள் எழுந்தது. பிக்பாஸ் தரப்பினரும் இதுதொடர்பாக விளக்கம் அளித்தனர்.
விளக்கம் அளித்த விஜய் சேதுபதி:
இந்த நிலையில், விஜய் சேதுபதி இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "இந்த மேடையில் நாங்கள் பேசும் கருத்துக்கள் எல்லாமே இந்த வீட்டில் உள்ள எங்களின் போட்டியாளர்கள் மற்றும் எங்களுக்கும் இடையேயானது மட்டுமே ஆகும். இது வெளியில் இருக்கும் யாரையும், எந்த அமைப்பையும் சார்ந்தது அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்."
#Day13 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) September 19, 2026
Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/cu6fRBUSF1
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆதரவாளர்:
விஜய் சேதுபதி திமுக ஆதரவாளர் என்பதாலே இவ்வாறு கருத்து கூறியதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர் நடித்த பத்தா திரைப்படத்தின் நிகழ்ச்சியிலும் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான அட்லீ விஜய் சேதுபதியை மறைமுகமாக விளாசி பேசினார். விஜய் சேதுபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி கடந்த காலங்களில் திமுக அரசையும், மு.க.ஸ்டாலினையும், உதயநிதியையும் பாராட்டி பேசியிருந்தார். ஆனால், தவெக ஆட்சிக்கு பிறகு அவர் அமைதியாக இருந்து வந்த நிலையில், அன்று அவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
தவெக, விஜய் ரசிகர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவு அளிப்பதாக திமுக, அதிமுக ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதனால், இணையத்தில் இது மேலும் மோதலை உண்டாக்கியது.
ட்ரெண்டிங் செய்திகள்





















