Bigg Boss: வாட்டர்மெலனுக்கு வாழ்வுதான்... திவாகருக்கு முத்தம் கொடுத்த அரோரா - நீங்களே பாருங்க!
பிக்பாஸில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு அரோரா முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள போட்டியாளர்களில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, விஜே பார்வதி, சபரி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
வாட்டர்மெலனுக்கு முத்தம் கொடுத்த பலூன் அக்கா:
பலூன் அக்கா என்ற பெயரில் பிரபலமான அரோரா-விற்கு ஆதரவாகவும், அவரை விமர்சித்து சிலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அனைவருடனும் சகஜகமாக பழகி வரும் அரோரா தற்போது வாட்டர்மெலன் ஸ்டாருடனும் நட்பாக பழகி வருகிறார்.
இந்த சூழலில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு பலூன் அக்கா அரோரா பிக்பாஸ் வீடு - சூப்பர் டீலக்ஸ் வீடு இரண்டிற்கும் இடையே உள்ள கண்ணாடி வழியாக அரோரா வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு முத்தம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Diwakar ♥️ #Aurora :: Favorite couple in the house.! 🫰❤️#BiggBossTamil9 #BiggBossTamil #BiggBoss9Tamil pic.twitter.com/sDJ7cuQKgg
— Rasigan@Fan🎙️ (@Rasigan_022) October 13, 2025
மேலும், கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்த பிறகு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நான் சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று கத்திக்கொண்டே சென்றார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் போட்டிகள் பிக்பாஸால் நடத்தப்பட்டு வரும் சூழலில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்குள் அவ்வப்போது சண்டையிட்டும் வருகின்றனர்.
சண்டைகளும், கலகலப்புகளும்:
விவாதங்கள், சண்டைகள், கலகலப்புகள் என விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சீசனில் இயக்குனர் ப்ரவீன்காந்தி வெளியேற்றப்பட்ட நிலையில், நந்தினி தானாக வெளியேறினார். இந்த சீசன் தொடங்கும் முன்பு கடும் விமர்சனத்துடன் சென்ற வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு தற்போது ஆதரவுகள் அதிகரித்து வரும் நிலையில், அரோராவிற்கும் ஆதரவுகள் தற்போது அதிகரித்து வருகிறது.





















