Bigg Boss Tamil: டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா, விஜய்: சம்பவம் செய்த தினேஷ்
Bigg Boss Tamil Season 7: கடந்த வார வீக் எண்டில் கமல் பேசுகையில் வரும் வாரங்களில் மூன்று எவிக்சன் கூட நடக்க வாய்ப்புள்ளதாக சூசகமாகக் கூறியுள்ளார்.
தமிழில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 ரியாலிட்டி ஷோ தற்போது 70 நாட்களைக் கடந்துள்ளது. தற்போது சரவண விக்ரம், மாயா, பூர்ணிமா, ரவீனா, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், விஷ்ணு, தினேஷ், நிக்சன், விசித்ரா, விஜய் வர்மா, அனன்யா மற்றும் அர்ச்சனா என மொத்தம் 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். கடந்த வார வீக் எண்டில் கமல் பேசுகையில் வரும் வாரங்களில் மூன்று எவிக்சன் கூட நடக்க வாய்ப்புள்ளதாக சூசகமாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்றைய ப்ரோமோவில், பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகும் வாய்ப்பினை வழங்கும் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்த போட்டியில் பங்கு பெறக்கூடாது என ஹவுஸ் மேட்ஸ் நினைக்கும் இரண்டு போட்டியாளார்களை தேர்வு செய்துள்ளனர். இதில் பெரும்பான்மையாக விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா ஆகியோரை தேர்வு செய்துள்ளனர். இதற்காக ஒவ்வொருவரும் மற்றவர்கள் பெயரைக் குறிப்பிட காரணங்களைக் கூறியுள்ளனர். இதில் தினேஷ், அர்ச்சனாவின் பெயரைச் சொல்லி, ’அர்ச்சனாவுக்கு டிக்கெட் டூ ஃபினாலேவின் வேல்யூ தெரியுமா எனத் தெரியவில்லை. அதனால் அர்ச்சனாவைக் கூறுகின்றேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் அர்ச்சனா சக போட்டியாளரான விசித்ராவிடம், அவர் (தினேஷ்) சொன்ன காரணம் மட்டும் எனக்கு கொஞ்சம் கடுப்பா இருக்கு. உண்மையிலேயே தினேஷ் ப்ரோவ் எனக்கு ரொம்ப குளோஸ். கூடவே இருந்தேன் அண்ணா அண்ணானு” எனக் கூறுகின்றார்.
View this post on Instagram
இதற்கு பிக்பாஸ் ஆதரவாளார்கள் தரப்பில், மாயா பூர்ணிமாவுக்கோ அல்லது பூர்ணிமா மாயாவுக்கோ ஆதரவாக எதையாவது செய்தால் அதனை ஃபேஃபரேடிசம் எனக் கூறும் அர்ச்சனா தனக்கு டிக்கெட் டூ ஃபினாலே வாய்ப்புக்கு எதிராக வாக்களித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது என்பது அவரும் ஃபேஃபரேடிசத்தினை எதிர்பார்க்கின்றார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதுமட்டும் இல்லாமல் இந்த ப்ரோமோவில், விஷ்ணு தனது சக போட்டியாளரான சரவண விக்ரம் குறித்து, ‘ 10வது வாரம் ஒருத்தன் ஒளுஞ்சு ஒளுஞ்சு வந்து நிக்கிறான். சும்மா இருந்துட்டே 5 ஸ்டார வாங்கீட்டான்” எனக் கூறுகின்றார். இந்நிலையில் இன்று இரவு ஒளிபரபப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் வெற்றி பெறவுள்ளனர் என பார்க்கலாம். விக்ரம் ஏற்கனவே 5 ஸ்டார்களை வென்று இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.