மேலும் அறிய

Bigg Boss Tamil 8: ”நாளை தொடங்குது பிக்பாஸ்” விஜய் சேதுபதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நாளை முதல் தொடர்ந்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தமிழில் அதிகளவு ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலே அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக இருப்பது ஆண்டுக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 8.

விஜய் சேதுபதி:

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் இந்த தொடரின் 7 சீசன்களைத் தொகுத்து வழங்கிய நிலையில், அரசியல், படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, யார் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை திரைப்படங்களில் நாயகன், வில்லன் என பல பரிமாணங்களில் ஜொலித்த விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார்? என்ற பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை முதல் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நாளை முதல் பிக்பாஸ் சீசன் 8:

நாளை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. விஜய் தொலைக்காட்சி மட்டுமின்றி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காணலாம். நிகழ்ச்சியில் இதுவரை யார்? யார்? பங்கேற்க உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகவில்லை. ஒவ்வொரு போட்டியாளரும் நாளை பிரம்மாண்ட வரவேற்புடன் பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் செல்ல உள்ளனர்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு மேலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நிலையிலும் அடுத்தடுத்து வெளியாகும் ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ், விஜேஎஸ் ப்ளான்:

நிகழ்ச்சியின் முதல் நாளான நாளையே பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வித்தியாசமான டாஸ்க்குடன் முதல் நாள் ஆட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த இரண்டு சீசன்களாக போட்டியின் முதல் நாளே வித்தியாசமான டாஸ்க்குளுடன் போட்டி தொடங்குகிறது. இந்த முறையும் அதேபோல வித்தியாசமான டாஸ்க்குடன் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன், மானாடா மயிலாட மூலம் புகழ்பெற்ற கோகுல்நாத், நடிகர் விடிவி கணேஷ், நடிகை அன்ஷிதா, நடிகர் விஜே விஷால், நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு. நடிகர் டி.எஸ்.கே., நடிகை தர்ஷிகா, நடிகை சுனிதா, நடிகை சாக்‌ஷனா, பாடகர் பால் டப்பா அனிஷ், நடிகை தர்ஷா குப்சதா, நடிகை அர்னவ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பெயர்கள் உத்தேச பட்டியலாகவே தற்போது வரை உள்ளது. நாளையே அதிகாரப்பூர்வமாக யார்?  யார்? பங்கேற்கிறார்கள் என்ற தகவல் வெளியாகும். விஜய் சேதுபதி பல வித்தியாசமான அணுகுமுறையால் இந்த சீசனை மேலும் விறுவிறுப்பாக மாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில்  அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில் அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 5: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Embed widget