Pavni Reddy | பாவனிக்கு ரெண்டாவது கல்யாணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சகோதரி.
"அவள் கடந்த 4 வருடங்களாக தனது கணவரின் மறைவிற்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக் கொண்டாள்"
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவர் பாவனி ரெட்டி. இவர் பிக்பாஸின் கதை சொல்லட்டுமா என்னும் பகுதியில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஹவுஸ் மேட்டுடன் பகிர்ந்துக்கொண்டார். குறிப்பாக தனது கணவர் தற்கொலை விவகாரம் குறித்து பகிந்த பாவனி . அவர் இறந்த பொழுது நான் அழவில்லை.என்னை தனியாக விட்டுச்சென்றதற்கு கோபம்தான் வந்தது. நாங்கள் எங்கள் வாழ்க்கை குறித்த பெருங்கனவு கொண்டிருந்தோம் என கூறினார். இந்த கதையை கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேச தொடங்கிவிட்டனர். இன்னும் சிலரோ, பாவனி ரெட்டிக்கு இரண்டாவது காதலர் இருக்கும் சூழலில் அவர் ஏன் முதல் கணவரை பற்றி பேசுகிறார் என பரப்ப தொடங்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி இது குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
View this post on Instagram
அதில் ”பாவனியை பற்றியும் அவள் உறவுகளைப் பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும் சர்ச்சைகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன்.பாவனி அவளது கணவர் ப்ரதிப் குமாரின் எதர்பாராத மறைவிற்குப் பிறகுமறுமணம் செய்து கொள்ளவில்லை. பாவனி அவள் கணவர் மீது மிகவும்பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியானதம்பதியினராகத்தான் இருந்தனர். அவர் மறைவிர்க்குப் பிறகும் அவரின் நினைவுகள் அவளைவிட்டு நீங்கவில்லை. அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளே! ஆனால் அவள் சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர். அவள் கடந்த 4 வருடங்களாக தனது கணவரின் மறைவிற்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக் கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார். எனவே அனைத்து ஊடக பணியாளர்களும் ரசிகர்களும் மற்றும் அவளுடைய நலன் விரும்பிகளும் அவளின் உணர்வுகளையும் தனிநபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.