Bigg Boss 7 Tamil: ”வன்ம குடோன்" - விக்ரம் வெளியேறியபோது மாயா கொடுத்த ரியாக்ஷன் - வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
விக்ரமின் தங்கை பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது, மாயா குறித்து சில தகவல்களை தெரிவித்ததால் மாயா கடுப்பாகி உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7:
பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ள நிலையில், 85 நாள்களைக் கடந்து நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல், முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் இந்த முறை இந்த பிக்பாஸ் சீசன் நடந்து வருகிறது.
இந்த சீசனில் இரண்டு வீடு, புதிய டாஸ்க்குகள், டபுள் எவிக்ஷன் என தினந்தோறும் சுவாரசியமாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், அடுத்த 20 நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த வாரம் விக்ரம் வெளியேறிய நிலையில், மாயா, பூர்ணிமா, தினேஷ், மணி, ரவீனா, விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, நிக்சன், விசித்ரா ஆகியோர் இருக்கின்றனர். அதே நேரத்தில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மாயா, நிக்சன், தினேஷ், மணி, ரவீனா, விஷ்ணு ஆகியோர் உள்ளனர்.
மாயாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்:
இதற்கிடையில், நேற்றைய தினத்தில் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்ட போது, மாயாவின் ரியாக்ஷன் மோசமாக இருந்துள்ளது. இது வீட்டில் இருந்த சக போட்டியாளர்களையும் சற்று மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் வெளியேறிய போது, மாயாவிடம் பாசிட்டிவ்வாகவே பேசியிருந்தார். ஆனால், அதனை கொஞ்சம் கூட நினைக்காமல், மிக மோசமாக மாயா நடந்துக் கொண்டார். அதற்கு விளக்கமும் பூர்ணிமாவிடம் அளித்தார்.
விக்ரமின் தங்கை பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது மாயா குறித்து சில தகவல்களை தெரிவித்ததால் மாயா கடுப்பாகி உள்ளார். அதாவது விக்ரம் தங்கை கூறியதாவது, ”மாயா உன்னை பின்னாடி பேசுவதாகவும், நீ ஒரு டாஸ்கில் ஐந்து ஸ்டார்கள் வாங்கியது பற்றி ஏளனமாகவும் பேசினார்" என்றும் விக்ரமிடம் கூறியிருந்தார்.
பிக்பாஸில் வெடித்த மோதல்:
இதனால், கடுப்பான மாயா விக்ரமிடம் பேசாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் விக்ரம் வெளியேறியபோது, மாயா நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தது. இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நெட்சன்கள் மாயாவை வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும், வன்மம் நிறைந்த மாயா என்றும், இந்த வாரம் அவர் வெளியேற வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் கூட, நேற்று விக்ரம் வெளியேறிய போது, மாயா நடந்துக் கொண்ட விதம் பற்றி அர்ச்சனா கேள்வி எழுப்ப, இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. அதில், ” விக்ரம் வெளியே போகும் போது நீங்க ஹேட்ரெட் காட்றீங்க.
ஏன் அவர் மேல இருக்கற பாசத்தை காட்டல...” என அர்ச்சனா கேட்கிறார். அதற்கு பதிலளித்த மாயா, ” எனக்கு 10 வாரம் தெரியும். நீங்க அடிக்கும்போது நான் அவனை தூக்கி விட்டு இருக்கேன். அது மனிதாபிமானம் இல்லை, நான் ஹேட்ரெட் ஆக இருக்கிறேன் என்று சொல்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நீங்க எதிர்பார்க்கறதுபோல நான் நடந்துக் கொள்ள முடியாது” என காட்டமா பதிலளித்துள்ளார்.