Bigg Boss 7 Tamil House: இரண்டு வீடு ஆனா ஒரே வாசல்.. டபுள் ஆக்டிங்கில் வீட்டை சுற்றிக்காட்டிய கமல்.. என்னலாம் ஸ்பெஷல்?
Bigg Boss 7 Tamil House Features: படு சூப்பராக அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 7 வீடு... சுற்றிக் காட்டிய கமல்ஹாசன்!
பிக் பாஸ் சீசன் 7 இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மாஸான ஒரு என்ட்ரியுடன் "நாயகன் மீண்டும் வரார்..." என்ற பின்னணி பாடலுடன் என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
டூயல் ரோலில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். போன முறை இருந்ததை விடவும் மிகவும் சூப்பராக அமைக்கப்பட்டுள்ளது இந்த சீசன் செட். ஒரு கமல், எடக்கு முடாக்காக கேள்வி கேட்க, மற்றொரு கமல் கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறார்.
இரண்டு வீடு அது தான் இந்த பிக் பாஸ் சீசன் ட்விஸ்ட்டே! இந்த முறை ஜெயிலில் சங்கிலி எல்லாம் வைக்கப்பட்டு மிகவும் பயங்கரமாக காட்சி அளிக்கிறது. குட்டியா ஒரு ரூம் காட்டப்படுகிறது. அதில் தான் கிச்சன் இருக்கு. ஆனா பெரிய வீட்டில் கிச்சன் இல்லை. இரண்டு வீடு ஆனா ஒரே வாசல், ஒரே கிச்சன். ஒரே குழப்பமா இருக்கு. பாவம் இந்த முறை வரும் போட்டியாளர்கள் எல்லாம் வசமா சிக்கப் போறாங்க.... இது தான் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது!