Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்றார் அர்ச்சனா.. ரன்னர் மணிசந்திரா
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவின் கிராண்ட் பைனல் அப்டேட்ஸை இங்கே காணலாம்.
LIVE
Background
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கிராண்ட் பைனல் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்புனா கலைநிகழ்ச்சியுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது. கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.
மொத்தம் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு மாதத்திற்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.
பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, ஆர்.ஜே. அர்ச்சனா ஆகியோர் நுழைந்தனர். இதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கப் தொடங்கியது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்ஷன், மிட்வீக் எவிக்ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்தது.
போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர்.
சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.
இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: டைட்டில் வென்ற அர்ச்சனா.. ரன்னர் ஆன இடம்பிடித்த மணிசந்திரா
பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். அவருக்கு பிபி 7 கோப்பையும் 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை மணி சந்திரா பிடித்தார்.
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: என் மகளை அனுப்ப எனக்கு விருப்பமில்ல... பிக்பாஸ் ஃபைனலில் அர்ச்சனாவின் தந்தை
பிக்பாஸ் ஃபைனலில் பேசிய போட்டியாளர் அர்ச்சனாவின் தந்தை, இந்த நிகழ்ச்சிக்கு தனது மகளை அனுப்புவதற்கு விருப்பம் இல்லை என்றும் வெளியே வரும்போது நிச்சயமான அர்ச்சனா தன் பெயரைக் கெடுத்துக் கொள்வார் என்று நம்பியதாக கூறினார். ஆனால் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து கமல்ஹாசன் அவருக்கு கொடுத்த அறிவுரைகளுக்கு கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார்.
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்றாவதாக வெளியேறினார் மாயா கிருஷ்ணன்
விஷ்ணு , தினேஷைத் தொடர்ந்து மூன்றாவதாக மாயா கிருஷ்ணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: இறுதி மேடையில் மாயா, அர்ச்சனா, மணி!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இறுதி மேடைக்கு வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனுடன் உரையாடி வருகின்றனர்.
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸில் நான் செய்த சாதனை இதுதான்..மனம் பகிர்ந்த கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக தான் பரிந்துரைத்த புத்தகங்களை நிறைய மக்கள் வாங்கிப் படிப்பதாகவும் அதுவே தான் செய்த மிகப்பெரிய சாதனையாக தான் கருதுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.