Bigg Boss Tamil: ‘கமல் சார் முன்பு நடிக்கத்தானே செய்கிறோம்’ .. உண்மையை ஒப்புக்கொண்ட பூர்ணிமா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான 4-வது ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் பூர்ணிமா பேசும் கருத்து ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
![Bigg Boss Tamil: ‘கமல் சார் முன்பு நடிக்கத்தானே செய்கிறோம்’ .. உண்மையை ஒப்புக்கொண்ட பூர்ணிமா! Bigg Boss 7 Tamil Contestants poornima ravi and maya accepts their fake activities Bigg Boss Tamil: ‘கமல் சார் முன்பு நடிக்கத்தானே செய்கிறோம்’ .. உண்மையை ஒப்புக்கொண்ட பூர்ணிமா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/5fdc0c47f3f845a5eba70d43d9f2a77e1699532482954572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான 4வது ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் பூர்ணிமா பேசும் கருத்து ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒமேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் வழக்கம்போல தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டதட்ட ஒரு மாதத்தை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக ரெட் கார்டு, மஞ்சள் கார்டு கொடுத்தெல்லாம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இந்த சீசனில் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள், ஸ்மால்பாஸ் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர். தினம் தினம் சண்டை என ரீதியில் ஏதாவது ஒரு பிரளயம் பிக்பாஸ் வீட்டில் வெடித்து வருகிறது.
இன்றைய தினம் (நவம்பர் 9) வெளியான 3வது ப்ரோமோவில், இது ஒரு மெமரி டாஸ்க். இந்த கேள்விகள் அனைத்தும் உங்களின் பில்களின் அடிப்படையில் இருக்கும் என சொல்லப்பட்டது. இதில் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் போட்டியாளர்களிடையே கடும் பிரச்சினை வெடித்தது. சும்மாவே நாங்க ஆடுவோம், இப்ப காலில் சலங்கை கட்டி விட்டு ஆடு ஆடு என சொன்னால் சும்மா இருப்போமா என்கிற ரீதியில் இந்த சண்டை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கமாக பிக்பாஸில் நடைபெறும் நீதிமன்ற டாஸ்க்கும் நடந்தது.
#Day39 #Promo4 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 9, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/RcrhPeXoPS
இதில் ஏடாகூடாமான வழக்குகளும், காரசாரமான விவாதங்களும் நடைபெற்றது. ஒருகட்டத்தில் இந்த டாஸ்க் முடிவில் பிக்பாஸ் தன்னிடம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என பூர்ணிமா ரவி சொன்னதெல்லாம் வேற லெவல். இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “இதில் சமைக்க எண்ணெய் வராதது குறித்து ஸ்மால்பாஸ் போட்டியாளர் தினேஷ், பிக்பாஸ் போட்டியாளர் பூர்ணிமா மற்றும் கேப்டன் மாயா ஆகியோரிடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெறுகிறது. இதில் கேப்டன் மாயா எதுவாக இருந்தாலும் கமல் சாரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கிறார். பின்னர் பூர்ணிமா, மாயா, ஜோவிகா உள்ளிட்ட பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பேசும் மாயா, ‘நம்ம சைடு தப்பு நிறைய இருக்கு. இதெல்லாம் கமல் சார் கேட்பாரு’ என கூறுகிறார். தொடர்ந்து பேசும் பூர்ணிமா, ‘நாம ஏதாவது பண்ணிட்டு வீக்கெண்ட் கமல் சார் கேப்பாரு. கழுவி ஊத்துவாரு. சாரி கேட்டுட்டு வருவது தானே நம்முடைய வழக்கம்’ என பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)