மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : 'மெல்ல விடை கொடு.. விடைகொடு.. மனமே' பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி "அவுட்..!"

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நிவாஷினி வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, ஆயிஷா,ஜனனி, அசிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிவாஷினி வெளியேற்றம்:

இந்த வாரத்தின் துவக்கத்தில், தனலட்சுமி அதிக ஓட்டுகளை பெற்று முதல் இடத்தில் இருந்தார். அதற்கு அடுத்து ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர் , குயின்சி மற்றும் நிவாஷினி இருந்தனர். பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும், இந்த வாரம் நிவாஷினிதான் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்த்து வந்தனர். அப்படி அவர் வெளியே சென்றால், அசல் கோலாருடன் நட்பு பாராட்டுவார் என்றும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் இருந்தவரை அனைத்து பெண்களுடன் நன்றாக பழகினார். ஆனால், நிவாஷினியுடன் மட்டும் உண்மையாகவும் நெருக்கமாகவும் பழகினார்.

தற்போது குறைந்த ஓட்டுக்களை பெற்று நிவாஷினி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறார். நிவாஷினி தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்த வில்லை என்ற கருத்தினை பல பிக்பாஸ் ரசிகர்கள் முன் வைக்கின்றனர். அசல் கோலருடன் பழகியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று சொல்கின்றனர்.

இப்படி சிலர் கூற, மற்றவர்கள், " அசிமுடன் சண்டை போட்ட போது அசல் வெளியேறினார். அதுபோல நிவாஷினியும் சண்டை போட்டு வெளியேறுகிறார் .இது அல்லவா கப்புள் கோல்ஸ்" என்று இருவரின் உறவை மெச்சுகின்றனர். 

எஞ்சிய போட்டியாளர்கள்:

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.இப்போது நிவாஷினி வெளியேறுகிறார்.

இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
 
தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget