Bigg Boss 6 Tamil: ‛சிங்கியா, மங்கியா, சொங்கியா?...’ சங்கி எங்கே? ஜி.பி.முத்து கடிதமும் கமல் அரசியலும்!
ஜிபி முத்து என்றாலே அவருக்கு வரும் தபால்களை படிக்கும் காட்சிகள் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் அவருக்கு தபால் பெட்டி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுக்கு வந்த லெட்டரை படிக்கும் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில், போகிற போக்கில் கமல்ஹாசன் வழக்கம்போல அரசியல் பேச்சை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
View this post on Instagram
பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து இருப்பது இந்நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மக்களிடையே நன்கு பிரபலமான அவரின் நேர்மை, பரிதாபமான பேச்சு என அனைத்தும் அவருக்கான ஆர்மியை வலுவாக மாற்றியுள்ளது. ஜிபி முத்துவை தொட்டால் அவ்வளவு தான் என்கிற அளவுக்கு அவருக்கு ஆதரவான கருத்துகள் தான் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதனிடையே அறிமுக நாளிலேயே ஜிபி முத்துவை அவர் கலாய்க்க நினைத்து, கடைசியில் கமலே பல்பு வாங்கினார்.
தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடிலும் கமலை மீண்டும் ஜிபி முத்து கலாய்த்தார். ஜிபி முத்து என்றாலே அவருக்கு வரும் தபால்களை படிக்கும் காட்சிகள் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் அவருக்கு தபால் பெட்டி வருகிறது. அதில் இருக்கும் லெட்டரில் முருங்கைக்காய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒரு லெட்டரில் வெளியே வந்து நடிகரானால் எந்த 2 கதாநாயகியுடன் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்கள்? உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டது.
Thalaivan Reaction 😂😂😂#GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBossTamilseason6 #BiggBoss pic.twitter.com/MK5QS6SHMJ
— GP Muthu Army (@drkuttysiva) October 16, 2022
அப்போது தலைவரே பிக்பாஸ் வீட்டில் நீங்கள் சிங்கியா, மங்கியா, சொங்கியா என்ற கேள்வி கேட்கப்பட்ட அதைக்கேட்டு ஜிபி முத்து அப்படின்னா என்ன பரிதாபமாக சக போட்டியாளர்களிடம் கேட்டார். உடனே கமல் இன்னொன்னு விட்டுட்டாங்கல்ல.. எனக்கும் அதான் தோணுச்சு என சொல்ல அமுதவாணன் சங்கி மங்கி என கூறினார். இதைக்கேட்டு பார்வையாளர்கள் தரப்பில் இருந்து கரவொலி எழுகிறது. இதற்கு ஜிபி முத்து மங்கி என தெரிவிக்கிறார். போகிற போக்கில் கமல் பாஜகவை வம்பிழுத்து பிக்பாஸ் மேடை தன் அரசியல் நையாண்டிக்குமான இடம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.