Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு குறும்படம்... ஒட்டுமொத்த நரிகளையும் நாறடித்த கமல்... குவியும் கைதட்டல்கள்!
“இந்த விஷயத்துல இந்த மாதிரி விளையாடிய தனலட்சுமி உங்களை தண்டிக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களை நான் கண்டிக்கிறேன்” என்று கமல் பேசியுள்ளார்
நேற்று நடந்த ஞாயிற்று கிழமை பஞ்சாயத்தில் தனலட்சுமி, குயின்ஸி, ரச்சித்தா மற்றும் அமுதவாணனுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் கமல ஹாசன்.
கடந்த வாரம் முழுவதும், ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் நடந்தது. அந்த டாஸ்க்கை விளையாடுவதற்காக, பிக்பாஸ் வீடு “ கண்ணா லட்டு திண்ண ஆசையா” மற்றும் “ அட தேன் அட” என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில், அந்த ஸ்வீட் ஸ்டால் 24 மணி நேரம் இயக்கப்பட வேண்டும் என்றும், பலகாரங்களை செய்து ஆர்டர் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டது.அதுமட்டுமில்லாமல், கல்லாவில் உள்ள பணத்தையும் பொருட்களையும் பாதுகாக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இப்படியாக போட்டியாளர்கள் அனைவரும் அந்த டாஸ்க்கினை மும்மரமாக விளையாடி முடித்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்னைகள் எழுந்தது. வார வாரம் கமலிடம் சிக்கும் தனலட்சுமி, இந்த வாரம் குயின்சி, ரச்சித்தா மற்றும் அமுதவாணன் ஆகியோருடன் சிக்கியுள்ளார். ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில், கல்லா பெட்டியில் பணம் இருக்கும் பணம் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விக்ரமன் அணியினர் தங்கள் பணத்தை அபகரித்து விடுவார்கள் என்று அதை பாதுகாக்க முடிவு செய்த தனலட்சுமி, கல்லாவில் இருந்த பணத்தை மறைத்து வைத்த குயின்ஸிக்கு ஐடியா கொடுத்தார்.
#Kamalhasaan sir - for #Dhanalakshmi it's condemn
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 13, 2022
For #Rachitha #Queency and #Amudhavanan it's warning
👏👏#BiggBossTamil6 pic.twitter.com/dnof6zMO17
தனத்தின் பேச்சை கேட்டு குயின்சி அப்பணத்தை எடுத்து மறைத்தார். இந்த விஷயம் ரச்சித்தாவிற்கும் தெரியவந்துள்ளது ஆனால் கடைசி வரை இது குறித்து அவர் எதுவும் பேசாமல் இருந்து இருக்கிறார். அமுதவாணனுக்கும் இதுகுறித்து முதலில் தெரிய வரவில்லை என்றாலும், பின்னர் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் விதிகளை மீறி, பணத்தை பதுக்கியது தொடர்பான பிரச்னையாக இதை முன்னெடுத்தார் கமல்.
இந்த பிரச்னை குறித்து கமல் பேசினார். அப்போது, “ இந்த விஷயத்துல இந்த மாதிரி விளையாடிய தனலட்சுமி உங்களை தண்டிக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களை நான் கண்டிக்கிறேன் என்று சமந்தப்பட்ட நால்வரிடம் கூறிய பின்பு, எல்லோருடனும் சேர்ந்து கைதட்டுனீர்கள். உங்கள் மீது குத்தப்பட்ட முத்திரை, நீங்கள் மற்றவர்கள் மீது குத்திய முத்திரையை விட பெரிது. இதை அழிப்பதற்கான வேலையை நீங்கள் மேற்கொள்ளுங்கள்” என்று ரச்சிதாவிடம் கூறினார்.
பின்னர் குயின்சி “ எனக்கு தெரியும் இது தப்புதான் என்று. ஏற்கனவே அந்த அணியில் பல பிரச்னைகள் போய் கொண்டிருந்தது. நானே ஒரு நாள்தான் முழுமையாக வேலை செய்தேன்.” என்று தன் தரப்பினை விளக்கிக்கொண்டிருந்த போது கமல் குறுக்கிட்டு, “ குற்றத்திற்கு உடைந்தையாக இருந்தவர்கள் எப்போதும் கூறுவது, எனக்கு பயமாக இருந்தது வேறு வழியில்லாமல் இதை செய்துவிட்டேன் என்பதுதான்.” என்று சொன்னார்.
#Rachita #Queency #Amudhavanan tries to put full blame on #Dhana but #KamalHassan says you guys are not even realising it’s wrong and still smiling. #Kamal sir on 🔥🔥🔥. #Dhanalakshmi pic.twitter.com/cWvDaC0l39
— siva (@winsiva1994) November 13, 2022
பின் அமுதவாணன் பக்கம் திரும்பிய கமல் அவரிடம் இதை குறித்து கேட்டிருந்த போது, ரச்சித்தா எழுந்து பேசினார். அப்போது கமல், “ இது ஒரு மோசடி என்பது உங்களுக்கு தெரிகிறதா? உங்கள் சிரிப்பெல்லாம் இது உங்களுக்கு புரியவில்லை என்று காட்டுகிறது. இது ஒரு அப்படமான மோசடியாகும்.” என்று அவர்களை கமல் விளாசினார்.
அத்துடன் இந்த ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில் தனலட்சுமி அணி ஜெயித்திருந்தது. ஜெயித்த அணியின் கேப்டன், வரும் வாரத்தின் எவிக்ஷனிலிருந்து தப்பிக்கலாம் என்று கிடைத்த வாய்ப்பை இந்த மோசடியின் மூலம் தனலட்சுமி இழந்துள்ளார். அதனால், இந்த வாய்ப்பு எதிரணியின் கேப்டனான விக்ரமனுக்கு சென்றுள்ளது.