மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Finale: ஒருவாரத்துக்கு ஒத்திப்போட நினைத்த கமல்: அஸிம் சொன்ன பதிலால் அரண்டு போன பிக்பாஸ் அரங்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கலாமா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அஸிம் சொன்ன பதிலால் அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கலாமா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அஸிம் சொன்ன பதிலால் அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது. 

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. ஆனாலும் திரை பிரபலங்கள் தவிர்த்து மக்கள் போட்டியாளர்களும் முதல்முறையாக களம் கண்டதால் பார்வையாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். 

இறுதிப்போட்டி 

இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ள நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அகம் டிவி வழியாக சென்ற கமல்ஹாசன் 3 பேரிடமும் வீட்டின் கடைசி நாள் எப்படி இருந்தது என கேட்டார். 

அதற்கு, “ரொம்ப அமைதியா இருக்கு. வழக்கமா பிக்பாஸ் சவுண்ட் இருக்கும். இப்ப ஃபைனல் பற்றிய பயமும் சேர்ந்து ஒரு மாதிரி இருக்கு” என ஷிவின் கூறினார். தொடர்ந்து, “அண்ணன் இத்தனை நாள் வாழ்ந்த வீட்டை காலி பண்ணிட்டு போகிற மாதிரி இருக்கு. 106 நாட்கள் இருந்திருக்கிறோம். ஒவ்வொரு இடமும் ஒரு நினைவுகளால நிறைஞ்சிருக்கு” என விக்ரமன் தெரிவித்தார். 

இதனையடுத்து பேசிய அஸிம், “ரங்கராட்டினம் சுற்றுவது போல ஒரு மாதிரி திகிலா இருக்கு. விக்ரமன் சொன்னமாதிரி வீட்டை காலி பண்ற மாதிரி அமைதியா இருக்கு. இத்தனை நாளா நானே சமைச்சு, விரும்பி சாப்பிட்டு இருந்த எங்களுக்கு நேற்று முதல் விதவிதமா சாப்பாடு வருது. ரொம்ப பிரமாண்டமா இருக்குது. இந்த அலங்காரங்கள் எல்லாம் பார்க்கும் போது 106வது நாளில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என அஸிம் கூறினார். 

அப்போது கமல்,  இந்த போட்டியை இன்னும் 7 அல்லது 10 நாட்கள் நீட்டிக்கலாமா என்ற எண்ணம் எழுவதாக தெரிவித்தார். அதற்கு அஸிம் நான் ரெடி என கெத்தாக சொல்ல, விக்ரமன், ஷிவின் இருவரும் மனதை இங்கிருந்து கிளம்ப போகிறோம் என தயார் படுத்தி விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget