Bigg Boss 6 Tamil: அப்படிப்போடு...எதிர்பார்த்த அந்த நாள் வந்தாச்சு...களைக்கட்டப் போகும் பிக்பாஸ் வீடு..!
வாரம் முழுக்க இதே கெட்டப்பில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும். இதற்காக போட்டியாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வார டாஸ்க்கின் ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. இதனை வாரா வாரம் கமல் சுட்டிக்காட்டினாலும் டாஸ்கிலும் சரி, வீட்டில் பிற விஷயங்களிலும் சரி போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாமல் எனக்கென்று இருக்கிறார்கள்.
ஆனால் சண்டை என்று வந்து விட்டால் ஆண், பெண் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் மல்லுக்கு நிற்கிறார்கள். இதில் வார்த்தைகளை வீசி விமர்சனம் செய்வதும், நேரடி தாக்குதல் நடத்த முன்வருவதும் என பார்ப்பதற்கே யாராவது குறுக்கப் போய் இந்த சண்டையை நிறுத்துங்களேன் என டிவி முன்னால் இருக்கும் நாமுமே பதறுவோம்.
View this post on Instagram
இதனிடையே கடந்த வாரம் எலிமினேஷனில் குயின்ஸி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடர்பான காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது. இதில் ஆயிஷா,ராம் மற்றும் அஸிம் ஆகியோர் பெயர்கள் அதிகமுறை அடிப்பட்டது. இந்த வாரம் இரண்டு எவிக்ஷன்கள் இருப்பதால் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒரு ஜாலியாக ரசிக்கக்கூடிய டாஸ்க் இதுவரை கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் ரசிகர்களின் எண்ணத்தை பிக்பாஸ் நிறைவேற்றியுள்ளார்.
அதாவது ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல கேரக்டர்களாக போட்டியாளர்கள் மாறிக்கொண்டுள்ளனர். வாரம் முழுக்க இதே கெட்டப்பில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும். இதற்காக போட்டியாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சரோஜாதேவியாக ரச்சிதா, நாய்சேகர் கெட்டப்பில் மைனா, அந்நியன் ஆக விக்ரமன், ஜெகன்மோகினியாக ஷிவின், நேசமணியாக தனலட்சுமி,மைக்கேல் ஜாக்சனாக விஜே கதிரவன், வக்கீல் கெட்டப்பில் அஸிம், ஹீரோ கெட்டப்பில் ஜனனி, சார்லி சாப்ளின் ஆக அமுதவாணன் என ஆட்டம், பாட்டம் என டாஸ்க் களைக்கட்டுகிறது.