Bigg Boss 6 Tamil : தனலட்சுமி முகத்தில் 1 லட்சம் முட்டை உடைப்பாங்க... முட்டையை உடைத்த தனம்; அசிங்கப்படுத்திய அஸிம்!
Bigg Boss 6 Tamil : அஸிம் முகத்தில் முட்டையை அடித்து அவரை பழங்குடியினர் அணியின் சேவகராக தனலட்சுமி மாற்றிவிட்டார்.
இந்த வாரத்தில்“பழங்குடியின மக்களும், ஏலியன்ஷன்ஸ்களும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீடு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
மூன்றாவது ப்ரோமோவில், ஏலியன்ஸ் அணியுடன் மோத, பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்கிறார் அஸிம். அப்போது அவர் முகத்தில் முட்டையை உடைத்து பூசினார் தனம். முதலில் அசராத சிங்காம இருந்த அஸிம் ஒரு கட்டதிற்கு மேல் தாங்கமுடியாமல் ரியாக்ட் செய்துவிட்டார். அதனால், தனம் அவரை தரதரவென்று இழுத்து சென்று உட்கார வைத்தார். அதற்கு ஏற்றவாரு, பிக்பாஸ் அஸிமின் தோல்வியை அனைவரின் முன்பாக அறிவித்தார். வெளியே அடிக்க வேண்டிய முட்டையை நான் உள்ளேயே அடித்து விட்டேன் என தனலட்சுமி கூறியதற்கு, "தனலட்சுமி வெளியே போனால் அவரின் முகத்தில் ஒரு லட்சம் முட்டை அடிப்பார்கள்" என்று பதிலளித்தார் அஸிம்.
View this post on Instagram
இரண்டாவது ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்க்கை முடித்து விட்டு சற்று ஓய்வெடுக்க ஹாலில் அமர்ந்துகொண்டு இருக்கின்றனர். அந்த சமயத்தில் அமுதவாணனுக்கும் அசிமிற்கும் பேச்சுவார்த்தை ஏற்படுகிறது. இந்த சண்டை போதாது என்று விக்ரமனும் இந்த சண்டையில் தலையிட்டு, “ரவுடித்தனம் பண்ணிட்டு இருங்கீங்க” என்று கூறினார். அதன் பின், “எட்டி உதைப்பது போல் செய்க்கை காட்டுகிறாய். ரவுடியா நீ” என்று அமுதவாணன் கொந்தளித்தார்.
இதன் முன் வந்த முதல் ப்ரோமோவில், ஏலியன்ஸ்களிடம் விக்ரமன் மாட்டிக்கொள்கிறார். அவரை தோற்கடிக்க, தனலட்சுமி வெறித்தனமாக கத்துகிறார். அனைத்தையும் கேட்டும் கேட்காதது போல் , அஞ்சா நெஞ்சனாக இருந்து பஸ்சர் அடிக்கும் வரை தாக்கு பிடிக்கிறார் விக்ரமன். ஆனால், இந்த ப்ரோமோவில் தனலட்சுமி செய்யும் டார்ச்சர், டாஸ்க்கிற்காக செய்யப்பட்டாலும் பார்பதற்கு இயல்பாக உள்ளது. ஒரு டாஸ்க்கிற்காகவே, இப்படி நடந்து கொள்ளும் தனம், மற்ற சமயங்களில் எல்லோரின் கவனத்தை ஈர்க்கவும், ஸ்கோர் செய்யவும்தான் கோபப்பட்டு சத்தம் போட்டு நடிக்கிறாரா என்ற பெரிய கேள்வி எழுகிறது.
எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.