Bigg Boss 6 Tamil : ‛தப்பைத் தட்டி கேக்குறதுதான் நம்ம வேலை...’ சனிக்கிழமை ஸ்பீச்சை தொடங்கிய கமல்!
Bigg Boss 6 Tamil : “தப்பு பண்றவங்களுக்கு, தான் செய்யறது தப்புனே தெரியாம போவது எப்ப தெரியுமா..? நீ செய்யறது தப்புனே சொல்லறதுக்கு ஆளே இல்லாம போகும் போது தான்”என்று கமல் ஹாசன் பேசியுள்ளார்.
இதில் தப்ப தட்டி கேட்க வேண்டும் என்று நடிகர் கமல் காட்டமாக பேசியிருக்கிறார். வழக்கமாக, வாரநாட்களில் 10 மணிக்கு வெளியாகும் முதல் ப்ரோமோ, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சற்று லேட்டாகதான் வெளியாகும். அப்படியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13 வது நாளின் முதல் ப்ரோமோ வெளியாகிவுள்ளது.
முன்னதாக, குயின்சி அனைவரிடம் பேசியபோது, அவரின் முழங்கையை அவரின் அனுமதியில்லாமலே தடவி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், கடுப்பான குயின்சி அவரின் கையை தட்டி விட்டார். அதைதொடர்ந்து, மகேஸ்வரியின் அருகில் அமர்ந்து, அவரின் முட்டியை கூசுவதுபோல் தடவினார். அடுத்து, நந்தினியின் கைகளை விடாமல் பிடித்து கொண்டு இருந்தார். இவர் தேடி தேடி, பெண்கள் இருக்கும் இடத்திலேயே சென்று அமர்ந்து அவர்களை கட்டிப்பிடித்து மன்மதலீலை வேலைகளை செய்துவருகிறார்.
View this post on Instagram
அசல் கோலாரு செய்த தவறான காரியத்தை பார்த்த மக்கள் கடுப்பாகி “அவனுக்கு ரெட்-கார்ட் கொடுங்க, இவன் ஒரு பொறுக்கி, பெண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு இவன் செய்யும் வேலைகள் அறுவெறுப்பை தருகிறது. கமல்ஹாசன் சார், இவனை எதிர்த்து ஏதாவது கேளுங்கள்.”என்று அவர்களின் ஆதங்கத்தை ட்வீட் செய்து வருகின்றனர்.
அதனைதொடர்ந்து, இன்று வெளியான முதல் ப்ரோமோவில், “தப்பு பண்றவங்களுக்கு, தான் செய்யறது தப்புனே தெரியாம போவது எப்ப தெரியுமா..? நீ செய்யறது தப்புனே சொல்லறதுக்கு ஆளே இல்லாம போக மோதுதான். தப்ப தட்டி கேக்குறதுதான் நம்ம வேலை. அதுக்குதான நாம இருக்கோம். கேட்டுடுவோமா?”என்று கமல் ஹாசன் பேசியுள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள்:
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்.
மேலும் படிக்க : பீம்லா நாயக்.. தேஜாவு... மற்றும் பல உறவினர்கள் எல்லாம் வர்றாங்க... இது கலர்ஸின் கலர் தீபாவளி!