BiggBoss 5 Tamil Promo | ‛ஓவர் டோஸ் ப்ரியங்கா...’ டோஸ் விட்ட நடுவர்... டீஸ் பண்ண அண்ணாச்சி!
சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறித்திருக்கிறார்
Bigg Boss 5 Tamil Day 58: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணியை அடுத்து, நவம்பர் 28-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த வார பிக் பாஸ் சிறப்பு எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து, அக்ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், ப்ரியங்காவுக்கும், இமானுக்கும் நேற்றே மோதல் இருந்தநிலையில், இன்று மீண்டும் தொடர்ந்தது. பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் என்ற விளையாட்டில், ப்ரியங்காவுக்கும், இமானுக்கும் இருக்கும் மோதல் தொடர்கின்றது. இருவரும் ஒருவருக்கொருவர் சாடவே, இந்த மோதல் இன்னும் பெரிதாகும் என தெரிகிறது.
#Day58 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/NvCrvZCvae
— Vijay Television (@vijaytelevision) November 30, 2021
#Day58 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/Au6SuNJOtO
— Vijay Television (@vijaytelevision) November 30, 2021
#Day58 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/wKvwpP1jvt
— Vijay Television (@vijaytelevision) November 30, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்