Bigg Boss 5 Tamil: பிக் பாஸின் 5வது எலிமினேஷன்... ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மாதிரி இருந்து எலிமினேட் ஆன மது
அறிமுக வீடியோவில், அவ்வளவு அப்பாவித்தனமாக இருந்தவர் கடைசி வரை அப்படியே இருந்து வெளியேறி இருக்கிறார் மதுமிதா.
Bigg Boss 5 Tamil Day 42: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணுவை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வார எவிக்ஷன் பட்டியலில் 7 பேர் இருந்தனர். இதில், மதுமிதா எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து வந்தவர் மாடல் மதுமிதா. தற்போது மென்பொறியாளராக பணிபுரிகிறார். அறிமுக வீடியோவில், அவ்வளவு அப்பாவித்தனமாக இருந்தவர் கடைசி வரை அப்படியே இருந்து வெளியேறி இருக்கிறார்.
இன்றைய எபிசோடில், கமல் ஹாசன் வந்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் உரையாடினார். வழக்கம் போல இந்த வாரம் நடந்ததை ரீவைண்ட் செய்து போட்டியாளர்களிடம் பேசி கொண்டிருந்தார் கமல். தோள் கொடுப்பவர் எவர், முதுகில் குத்துவது எவர் என்ற கேள்வியை பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கேட்டும் நிரூப் - அபினய், சிபி - அக்ஷரா ஆகியோருக்கு மத்தியில் கொளுத்தி போட்டார் கமல்.அதனை தொடர்ந்து இசைவாணியின் கேப்டன்சி விமர்சனங்களுக்கு உள்ளாகவே, அட்வைஸ் செய்து ஆஃப் செய்தார் கமல். இறுதியாக மது எலிமினேட் செய்யப்பட்டு எபிசோடை முடித்து கொண்டனர்.
ப்ரொமோ:3
#BiggBossTamil இல் இன்று.. #Day42 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/XaKOVo3XMS
— Vijay Television (@vijaytelevision) November 14, 2021
ப்ரொமோ:2
#BiggBossTamil இல் இன்று.. #Day42 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/CPiy3xaeYM
— Vijay Television (@vijaytelevision) November 14, 2021
ப்ரொமோ:1
#BiggBossTamil இல் இன்று.. #Day42 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/84fF4RKkmm
— Vijay Television (@vijaytelevision) November 14, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்