Watch Video: சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் ஜூலி.! ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு பீச்சில் கவர்ச்சி டான்ஸ்.!
இன்ஸ்டாவில் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருவதால், இவரின் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை காண பலரும் ஆர்வத்துடன் ஜூலியின் இன்ஸ்டா பேஜ்ஜிற்கு அடிக்கடி வருவார்கள்.

பிக்பாஸ் புகழ் ஜூலி ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு பீச்சில் கவர்ச்சியாக நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, பிக்பாஸ் முதல் பாகம் மூலம் மீண்டும் பிரபலமானவர் ஜூலி. இவர் அதற்கு பிறகு தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே வருகிறார். இதனிடையே, விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அந்த போட்டோஷுட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார். இவரை, இன்ஸ்டாவில் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருவதால், இவரின் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை காண பலரும் ஆர்வத்துடன் இவரின் இன்ஸ்டா பக்கத்துக்கு அடிக்கடி வருவார்கள்.
தற்போது, ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தற்போது இந்தியாவை கலக்கிக்கொண்டிருக்கும் சமந்தா ஆடிய பாடலான ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு ஜூலி பீச்சில் கவர்ச்சியாக நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
முன்னதாக, தனது காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் நகை, பணம், பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டதாகவும், இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

