Bigg Boss 6 Tamil Episode 3: வனிதாவாக மாறிய சாந்தி.. டீ கேட்டது குத்தமா? கண்ணீரில் ஆயிஷா..! இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்!
Bigg Boss Tamil Season 6 Episode 3: இன்றைய பிக்பாஸ் எபிசோடில் நடந்த களேபரேங்களை இங்கு பார்க்கலாம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த குஷியோடும், கலாட்டாவுடனும் வந்த போட்டியாளர்கள் 4 கிளப்களாக பிரிக்கப்படுகின்றனர். ஷிவன் கிச்சன் கிளப் ஓனராகவும் அமுத வாணன் - பாத்ரூம் கிளப் ஓனராகவும்.. கதிரவன் கிளீனிங் கிளப் ஓனராகவும் ஜனனி வெசல் கிளப் ஓனராகவும் நியமிக்கப்பட்டனர்.
பிக்பாஸிடம் நீங்கள் விரும்பும் நபர்களை நண்பர்களாக்கி கொள்ளலாம் என அறிவிப்பு வர, அனைவரும் ஒன்று கூடினார்கள். ஏடிகே என்னை விட நீதான்பா சிறந்த கலைஞன்.. உங்கிட்ட இருந்து இன்னும் நிறைய கத்துக்க ஆசைப்படுறேன் என ஹைப் கொடுத்து அசல் கோலாருடன் ஃபரண்டாக ஆசைப்படுவதாக சொல்ல... ச்சே இதுல என்ன இருக்கு ப்ரோ.. நாம இனி ஃப்ரண்ட்ஸ் என்கிறார் அசல்.
தொடர்ந்து வந்த அமுதவாணன் நீங்களும் காமெடியன் நானும் காமெடியன் நம்ம இரண்டு பேரும் பழகலாமே என கேட்க வெகுளியாக ஜிபி ஓகே சொல்ல... இதுதான் கரெக்ட் டைம் என நினைத்த மதி எலிமினேஷன் ரவுண்டிலும் என்னை எலிமினேட் செய்யக்கூடாது என கூறி சத்தியம் பண்ண சொல்கிறார்.. அப்படி என்றால் என்னவென்றே தெரியாத ஜிபி... திருதிருவென முழிக்க.. மற்ற போட்டியாளர்கள் அதெல்லாம் கூடாது என சொல்லி மதியின் கனவில் மண் அள்ளி போட்டு விட்டார்கள்.
எனக்கு உங்கள பார்த்தா ஒரு பிரதர் ஃபீலிங் வருது நாம ஃப்ரண்ட் ஆகலாமே என சாந்தி ஜிபி முத்துவிடம் கேட்க.. முதல்ல உங்கள [ரொம்ப கெத்தான பொம்பளன்னு நினைச்சேன்.. ஆனா நீங்க ரொம்ப ஸ்வீட் என்று எங்க வீட்டுக்கு நீங்க சாப்பிட வரணும் என்று நட்பிற்கு பிள்ளையார் சுழி போட்டார் ஜிபி..
இங்க பாரு கொடுமைய
ராபர்ட் மாஸ்டர் எனக்கு கேர்ள் ஃபிரண்டே கிடையாது.. நீங்க ஃப்ரண்டா சேர்ந்துக்கிறீங்களா என ரக்ஷிதாவிடம் கேட்கும் போது நமக்கு வனிவின் கோர முகம் கண் முன்னே அப்படியே வந்து போனது...
எங்கடா இன்னும் ஏதும் நடக்கலையே என எதிர்பார்த்துக்கொண்டிருந்த போதுதான் ஆயுஷா - அசல் கோலார் மோதல் அரங்கேறியது.. அசல் நாம ஃப்ரண்ட் ஆகலாம்.. பேசலாம்..ஆனா வாடா போடான்னு கூப்பிடாதீங்கன்னு சொல்ல.. அப்ப வாங்க போங்கன்னு கூப்பிடவான்னு ஆயிஷா கேட்க... இல்ல அப்படியும் வேண்டாம்னு அசல் சொல்ல... குழம்பி நின்றார் ஆயுஷா..
நீங்க என்ன அப்ப வாடா போடா கூப்பிட்டது வலிச்சது தெரியுமா என அசல் கொஞ்சம் காட்டமாக பேச... ஜிபிமுத்து இங்க பாருங்க ஃபிரண்ட்சீப் னா இடம் பொருள் பார்த்து பேச முடியாது பார்த்துகிடுங்க.. என்று சைடு கேப்பில் ஸ்கோர் செய்தார்... வாங்க பஞ்சாயித்து பண்ணுவோம் என்று கூட்டம் கூடி இறுதியில் ஆயிஷா கண்ணில் கண்ணீரையே வரவழைத்துவிட்டார்கள். பாவம் பிஞ்சு கண்ணு...
பார்ட்டி தாங்குமா?
ஒரு பக்கம் நாம் ப்ச்... என்று உச்சுக்கொட்டினாலும் இன்னொரு பக்கம், ஆயிஷா இந்த சின்ன விஷயத்திற்கு இவ்வளவு எமோஷனல் ஆனதை பார்க்கும் போது.. இனி வரும் களேபரங்களை எப்படி தாங்க போகிறார் என்ற கேள்வி நம் மண்டைக்குள் டொய்ங் என்று அடித்தது.
அதிகாலையில் சமையல் டீம் குளிக்காம கொள்ளாம சமையலை பரபரவென கவனித்து வர, அதன் ஓனர் ஷிவின் கணேசன் ஃபரஷ்ஷாக குளித்து முடித்து வெளியே வந்தார்.. அவ்வளவுதான் மொத்த கோபத்தையும் பொறி பொறியென பொறிந்துவிட்டார்கள் சாந்தியும், மகேஷ்வரியும்...
சரிங்க.. இந்தா வந்துடுறேன்னு போனவங்கள பாய்ண்ட்ஸ் காரணம் காட்டி யூனிஃபார்ம் போட்டுட்டு வாங்க..இல்ல இல்ல உருளைக்கிழங்கை கட் பண்ணுங்க என மாறி மாறி அலைகழித்ததை பார்க்கும் ச்சே ஏதாவது ஒன்னை பண்ண சொல்லுங்கப்பா என்று தோன்றியது.
பேப்பர் ஐடியை மறக்காத ஜிபிமுத்து
உள்ளே போகியும் பேப்பர் ஐடியை மறக்காத ஜிபிமுத்து அவர்களுக்கு ஒரு சலாம் வைத்தது ரசிக்கும் படியாக இருந்தது.
பாத்ரூம் வருகிறவர்களுக்கு ரெட் கார்பட்.. சிங்க் கிளீனா இருக்கணும்.. பெட்ரூமை கிரேயேட்டிவாக வைக்கணும் அப்படின்னு ஆயிரெத்துட்டு ரூல்ஸ் பிக்பாஸிடம் இருந்து வந்தது.
வெல்கம் டிரிங்.. சாப்பாடு ரெடியாட்டு வாங்க சாமிகளா என சாந்தி கூப்பிட... ராபர்ட் உருளைக்கிழங்கு எப்படி நல்லா இருக்குமா என் கேட்டார்.. உடனே சூடான சாந்தி மதிவாணனை குறிவைத்து, உருளைக்கிழங்கு தோலை உரிச்சு நல்லா வைச்சுருக்கேன் என்று சொல்ல, அதற்கு பதிலடி கொடுத்த ரக்ஷிதா சாப்பாடு டீம் தானே என்னை இடுப்புல தூக்கி வைச்சுட்டு கொண்டு போயி சாப்பாடு ஊட்டுங்க என்று சொன்னார்.. உஷாரான சாந்திக்கும் இறுதியில் மரியாதை தானாக வந்தது.
அடுத்த வனிதாவா?
அவர் நடந்து கொண்டதை பார்க்கும் போது வரும் காலத்தில் பெரும் சண்டைகளின் அதிபதியாக வருவதற்கான அத்துனை லட்சணங்களும் அப்படியே இருக்கிறதே என்று தோன்றியது.
தூங்கி எந்திருச்ச அஸிம்... டீ போகப்போட... இந்தாங்க இங்க பாருங்க.. ஃபுட் டீம்முன்னு ஒருத்தர் இருக்கோம் நியாபகம் இருக்கா... எங்ககிட்ட கேட்கணுமாக்கும் என்று சொல்ல.. கடுப்பான அஸிம் கடுப்பாகி எனக்கு பால் டீ வேணும் என அடம்புடிக்க... டாஸ்க் தொடங்கும் போது எல்லாருக்கும் கொடுக்குறத உங்களுக்கும் கொடுப்போம் சொல்ல... முரட்டு காளையாக சண்டைக்கு நின்றார் அஸிம்.. ஆனால் அவரை அடக்கி ஆண்டு வழிக்கு கொண்டு வந்தார் மகேஷ்..
இறுதியில் இரண்டு பேரும் உட்கார்ந்து சமாதானம் பேசியது... அதில் அஸிம் பேசியது டேய் டேய் ஓவரா நடிக்காதீங்கடா என்று தோன்ற வைத்தது.. இதற்கிடையில் வந்த சத்தமாக கத்த வேண்டும் என்று வந்த டாஸ்க்கின் தலைப்பு சுவாரசியமாக இருந்தாலும், போட்டியில் சுவாரசியம் இல்லை...மொத்தத்தில் இன்றைய எபிசோடு சுமாராக கூட இல்லை என்பதே நிதர்சனம்