பாரதி கண்ணம்மா - பாக்கியலட்சுமி குடும்பங்கள் விரைவில் மெகா சங்கமம்..! ரசிகர்கள் குஷி!
பாக்கியலட்சுமி - பாரதி கண்ணம்மா குடும்பங்கள் மெகா சங்கமம் எபிசோட்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமானவைகளில் பாரதி கண்ணம்மாவும், பாக்கியலட்சுமியும் ஆகும். தற்போது பாரதி கண்ணம்மா தொடர் சற்று தொய்வாக சென்று கொண்டிருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியல் பாக்யா – கோபி – ராதிகா விவகாரத்தால் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக சீரியல்களில் சங்கமம் என்ற புதிய கான்சப்டை உருவாக்கி வருகின்றனர். இதன்படி, இரண்டு மெகா சீரியல் குடும்பங்கள் ஒருவருடன் ஒருவர் சந்தித்து கொள்வது போல காட்டப்படும். இந்த சங்கமம் நிகழ்ச்சிகளை அந்தந்த தொடர்களின் ரசிகர்கள் விரும்பிப்பார்ப்பார்கள். இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான பாரதி கண்ணம்மா – பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா- ராதிகா இருவரிடமும் எப்போது கோபி சிக்கிக்கொள்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூழலில், பாரதி கண்ணம்மா குடும்பத்தினரை இவர்கள் சந்திக்க இருப்பது திரைக்கதையில் கூடுதல் சுவாரசியத்தை தரும் என்று சீரியல்களின் குழுவினர் நம்புகின்றனர். அதேதருணத்தில் இந்த சந்திப்பு ரசிகர்களுக்கும் ரகளையான எபிசோடாக அமையும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கம நிகழ்ச்சி கடந்தாண்டு ஒளிபரப்பாகியது. அப்போது, இந்த எபிசோட்களால் விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது. தற்போது டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைக்கும் முயற்சியில் பாக்கியலட்சுமி – பாரதி கண்ணம்மா குடும்பங்கள் இணைய உள்ளனர்.
மேலும் படிக்க : Watch Video: கட் - அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி மனைவி.. அடுத்து நடந்தது இதுதான்..
மேலும் படிக்க : Samantha Unknown Facts: நீரிழிவு.. பார்ட் டைம் வேலை.. சமந்தாவை பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்