Behind The Song: கோபத்தில் கத்திய எம்.எஸ்.வி.. வார்த்தையில் மேஜிக் செய்த கண்ணதாசன்..”வான் நிலா” பாடலின் கதை!
கடந்த 1977 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தில் ஜெய்கணேஷ், மீரா, சிவசந்திரன், டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சரத்பாபு என பலரும் நடித்திருந்தனர்.
Behind The Song வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தில் இடம்பெற்ற “வான் நிலா” பாடல் பற்றி காணலாம்.
கடந்த 1977 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தில் ஜெய்கணேஷ், மீரா, சிவசந்திரன், டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சரத்பாபு என பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படம் கிராமத்தில் வாழும் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரும் நகரத்தில் வாழ ஆசைப்பட்டு வருவர். இங்கு நகர வாழ்க்கையில் ஈடு கொடுக்க முடியாமல் பிரச்சனைகளை சந்திப்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
பட்டினப்பிரவேசம் படம் 1977 ஆம் ஆண்டு விசு எழுதிய மேடை நாடகம் திரைப்பட வடிவமாகும். அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதிய நிலையில் இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய "வான் நிலா நிலா" பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. அப்பாடலின் ஒவ்வொரு வரியும் லா என முடியும். இந்த முழு பாடலும் உருவாவதற்கு பின்னால் சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.
எங்க ஊர்ல..
— மாதொருபாகன் (@maathorubhagan) June 3, 2024
நான் பார்த்து ரசித்த..
வான் நிலா 🌙🌙💖💖#HBDSPB 🎂💖🌙🍫 pic.twitter.com/8mPjAXuG2d
மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், “அந்த படத்துக்காக லா என முடியும் பாடல் வரிகளை நான் கேட்டேன். அதற்கு கண்ணதாசன் எங்கடா தமிழ்ல இவ்வளவு “லா” வார்த்தைக்கு போவேன் என கேட்டார். உங்களால் எழுத முடியாதா என நான் திரும்ப கேட்டேன். ட்யூன் நல்லா இல்லைன்னு திட்டி பாட்டே எழுத மாட்டேன்னு கண்ணதாசன் போய் விட்டார். நானும், கே.பாலசந்தரும் அருப்தியடைந்து விட்டோம். இதனையடுத்து கண்ணதாசனை தனியா கூப்பிட்டு போய் நன்றாக திட்டி விட்டேன். இப்படியெல்லாம் பாட்டெழுத மாட்டேன்னு சொன்னால் நீ கவிஞனாய்யா என்றெல்லாம் கேட்டேன். கோபம் வந்து முழு பாடலும் லா-வில் முடியுமாறு வார்த்தைகள் அமைத்து கொடுத்தார். மொத்த பாட்டையும் கேட்டு விட்டு பாதர் இன் லா, மதர் இன் லா, சன் இன் லா விடுப்பட்டது என நான் நகைச்சுவையாக கூறினேன். இப்படித்தான் அந்த பாடல் உருவானது” என தெரிவித்திருப்பார்.
மேலும் படிக்க: Behind The Song: ஹரிஹரனால் கதறி அழுத சித்ரா.. “உயிரே..உயிரே” பாடல் உருவான கதை இதோ..!