மேலும் அறிய

லட்சுமிக்கு உதவிய பாரதி.. அப்பாவின் பொறுப்பு இப்ப தான் வருது என கலாய்க்கும் கண்ணம்மா..!

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாரதி செயல்பட்டுள்ளார் எனவும், இது தான் அப்பாவின் பாசம் என ரசிகர்கள் கமெண்டுகளைத் தெறிக்க விடுகின்றனர்.

லட்சுமிக்கு ஆபத்தில் உதவிய பாரதியைப் பார்த்து அவளின் அம்மாவான கண்ணம்மா சந்தோஷப்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல்னா சொல்லவே தேவையில்லை அந்தளவிற்கு மிகப்பெரிய ரீச் ஆனது. டிஆர்பிலும் நம்பர் 1 இடத்தைத்தான் பெற்றது. சராசரி குடும்பத்தில் பிறந்த பெண், பெரிய குடும்பத்தில் அதுவும் டாக்டரை திருமணம் செய்துக்கொள்வதால் மாமியார் வெறுப்பதாகக் கதைக்களம் நகரும். அதிலும் கருப்பான பெண் கண்ணம்மா என்பதால் அவரை மாமியார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்  நாளடைவில் , அவளின் நல்ல மனதைப்பார்த்து மாமியார் சௌந்தர்யாவும் மனம் மாறுகிறார். ஆனால் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.

  • லட்சுமிக்கு உதவிய பாரதி.. அப்பாவின் பொறுப்பு இப்ப தான் வருது என கலாய்க்கும் கண்ணம்மா..!

இந்நிலையில் தான், கடந்த வாரம் லட்சுமியின் அப்பா யார் என கண்ணம்மா கூறுவது போல ப்ரோமோ வெளியானதும் ரசிகர்கள் கண்ணம்மா சீரியலுக்கு என்ட் கார்டு போட போகுதுன்னு நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல் லட்சுமியிடம் உனது அம்மா, அப்பா எல்லோரும் கண்ணம்மா தான் என கூறிவிடுகிறார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த கண்ணம்மாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் விதமான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது.

குறிப்பாக தனது தோழி ஹேமாவின் பேச்சைக்கேட்டு கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகிக்கிறார் டாக்டர் பாரதி. இதனால் கண்ணம்மாவின் மீது வெறுப்பைக்காட்டிய நிலையிலும், அவரின் குழந்தை லட்சுமியிடம் பாசத்தைக் காட்டும் அப்பாவாகவே திகழ்கிறார். இந்நிலையில் தான், ஹேமாவும், பாரதியும் காரில் வந்தப்போது, லட்சுமி குறுக்கே வருகிறாள். அவளைக்காப்பாற்றும் பாரத வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, ஏன் இப்படி குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறாய் என கண்ணம்மாவிடன் சண்டைப் போடுகிறார்.

 

இதனை அமைதியாகக் கேட்கும் கண்ணம்மா, இப்போது தான் லட்சுமிக்கு பொறுப்பான அப்பாவாக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்றும், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதாக சொல்கிறாள். .இதனைக் கூறியதும் பாரதி கோபத்துடன்  இருப்பது போன்று ப்ரோமோ முடிவடைகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாரதி செயல்பட்டுள்ளார் எனவும், இது தான் அப்பாவின் பாசம் என கமெண்டுகளைத் தெறிக்கவிடுகின்றனர். இதோடு இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது எனவும், தயவு செய்து சீக்கிரம் யாருன்னு உண்மையை சொல்லிவிடுங்கள் எனற் கோரிக்கையும் பாரதி கண்ணம்மாவின் இயக்குநருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget