மேலும் அறிய

Avatar: 12 வருட தவம்... மீண்டும் மிரட்ட வரும் அவதார் படத்தின் முதல் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

2 ஆம் பாகத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்கும் வகையில் அவதார் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

டெர்மினேட்டர், டைட்டானிக் உட்பட தனது படங்கள் மூலம் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய அவதார் திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றது. 

மதிப்புமிக்க கனிமமான யூனோப்டானியத்தை வெட்ட வேற்று கிரகம் ஒன்றான பண்டோராவை மனித இனம் கைப்பற்றுவதே இப்படத்தை அடிப்படை கதையாகும். அங்கு  “நவி” என்ற இனத்தினர் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இதற்காக மனிதர் ஒருவனை நவி இனத்தின் ஆளாக மாற்றி அனுப்பப்படுகிறான். அங்கு செல்லும் அவன் நிலைமையை உணர்ந்து பண்டோரா உலகத்தை காப்பாற்றப் போராடுவது மீதி கதையாகும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by James Cameron (@jamescameronofficial)

கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும், 3 ஆம் பாகம் 2024 ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியும், 4 ஆம் பாகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியும், 4 ஆம் பாகம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by James Cameron (@jamescameronofficial)

இந்தாண்டு வெளியாகும் 2 ஆம் பாகத்திற்கு  அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் இம்முறை கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும் பாதுகாக்கும் நவி இன மக்கள் குறித்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

கிட்டதட்ட முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் நிச்சயம் இதன் காட்சிகளை, கதையமைப்புகளை மறந்திருக்க கூடும் என்பதால் 2 ஆம் பாகத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்கும் வகையில் அவதார் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 4K தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள அவதார் படம் செப்டம்பர் 23 ஆம் தேதி ரிலீசாகும் என்று புதிய போஸ்டரோடு அறிவிப்பை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Krishnaraj: இசை உலகில் மீண்டும் ஒரு பேரிழப்பு.. தேவாவை தொடர்ந்து முக்கிய பாடகர் மறைவு! யார் இந்த கிருஷ்ணராஜ்?
Krishnaraj: இசை உலகில் மீண்டும் ஒரு பேரிழப்பு.. தேவாவை தொடர்ந்து முக்கிய பாடகர் மறைவு! யார் இந்த கிருஷ்ணராஜ்?
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
Embed widget