மேலும் அறிய

"இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்" பா ரஞ்சித் குறித்து நடிகர் ஆர்யா

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தில் தான் நடிக்க வந்தது குறித்து நடிகர் ஆர்யா பகிர்ந்துகொண்டுள்ளார்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதையுலகத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் மோதல்களையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த முன்னோட்டம் அமைந்துள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா, இப்படத்தில் தான் இணைந்த விதம் குறித்து பகிர்ந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் சிறந்த இயக்குநர் ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித் குறித்து இயக்குநர் ஆர்யா  பேசுகையில் " என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் பா ரஞ்சித். ரஞ்சித் ஈகோ இல்லாத ஒரு இயக்குநர். வேட்டுவம் பா ரஞ்சித் இதுவரை இயக்கதில் ரொம்ப தனித்துவமான ஒரு படம்.  தங்கலான் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அந்த படம்  சரியாக மக்களிடம் போய் சேரவில்லை என்பதை தெரிந்துகொண்டு இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் சொன்னார். அந்த ஈகோ இல்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு வேலை செய்வதற்கு ஹேட்ஸ் ஆஃப்" என்று கூறினார். 

ரூ25 கோடி டூ ரூ75 கோடி

வேட்டுவம் படத்திற்குள் தான் வந்தது குறித்து ஆர்யா பேசுகையில், “சிறிய படமாக 25 கோடி பட்ஜெட்டில் தொடங்கியது. ஆனால் இறுதியில் 75 கோடி பட்ஜெட்டில் மிகப்பெரிய படமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் நான் இந்தப் படத்தில் இல்லை. ‘சர்பட்டா பரம்பரை 2’ படம் தொடர்பாக தினமும் ரஞ்சித்தை சந்திக்கச் செல்வேன். அப்போது 60 நாட்களில் ‘வேட்டுவம்’ என்ற சிறிய படத்தை எடுக்கப்போவதாக அவர் சொன்னார். ‘நானும் படத்தில் இருக்கிறேனா?’ என்று கேட்டேன். ‘இல்லடா, நீயெல்லாம் இல்லை’ என்றார்.

ஆர்யா வந்த பின்னணி

பின்னர் ஒரு நாள் அழைத்து, ‘வேட்டுவத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நீ பண்ண வேண்டும்’ என்றார். கதை என்ன என்று கேட்டபோது, ‘கதை எல்லாம் உனக்கு சொல்ல முடியாது. கதை சொன்னால் நீ நடிக்க மாட்டாய். நீ ஷூட்டிங் வந்துரு’ என்று கூறினார்” என ஆர்யா தெரிவித்துள்ளார்.

‘வேட்டுவம்’ படத்தில் ஆர்யாவுடன் வி.ஆர்.தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.

2022ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட இப்படம், பா.ரஞ்சித்தின் எட்டாவது இயக்கப் படமாக உருவாகியுள்ளது. அறிவியல் புனைகதை மற்றும் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் பின்னணியில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பா.ரஞ்சித் மற்றும் ஆர்யா மீண்டும் இணையும் படம் என்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக இருவரும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இணைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Embed widget