மேலும் அறிய

சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ARR ஃபிலிம் சிட்டி - சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September 2024 அன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது.

வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.

நவீன அம்சங்கள் மற்றும் விரிவுபடுத்தக்கூடிய கட்டமைப்பு

1.9 பிக்சல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான LED சுவர் 40 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது. நேரடி 3D சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட அதிவேகத் துல்லியமான ரெண்டர் (Render) கட்டமைப்பு. 7,000 சதுர அடி பரப்பளவுடைய ஸ்டூடியோ.

விரிவான கேமரா டிராக்கிங் அமைப்பு, காட்சிகளுக்கு ஏற்ற ஒளியமைப்பைப் பெறுதல், படக்காட்சிகளின் தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றுதல், உயர்தரப் படக்காட்சிகள் மற்றும் நிறக்கட்டமைப்புகளை விரைவாக, விருப்பத்திற்கு ஏற்ற முறையில் செயல்படுத்தும் வசதி.

ஸ்டூடியோவை 20,000 சதுர அடிக்கு விரிவுபடுத்தும் திட்டம்.

படத்தயாரிப்பாளர்களுக்காக, தொடக்கம் முதல் நிறைவு வரை ஒருங்கிணைந்த தயாரிப்புத் தீர்வுகளை வழங்குதல்.

படப்பிடிப்பிலிருந்து, எடிட்டிங் & இறுதிப்பணி வரை சீராகச் செயல்படும் உட்புற (on-site) படப்பிடிப்பிற்குப் பின்பான தயாரிப்பு அறைகள்.

விரிவுபடுத்தக்கூடிய ரெண்டர் (render) கணினிகள், மிகக்கடினமான காட்சியமைப்புகளையும் எளிதாகக் கையாள்கிற வகையில் வடிவமைக்கப்பட்ட கணிப்பொறிகள்.

மொபைல் LED பக்கச்சுவர்கள், நகர்த்தக்கூடிய LED வான்முக விளக்குகள் (Sky light) மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கேமரா-டிராக்கிங் அமைப்புகள். இதனால் இலகுவாகும் படத்தயாரிப்பு.

திரைத்துறையின் தொலைநோக்குப்பார்வையைக் கொண்டு இயங்கும் பொறியியல் பணிமனை, தயாரிப்பு பணிச்சூழல், தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆதரவான உபகரணக் களஞ்சியம்.

உடனடி கூட்டுச்செயல்பாட்டிற்காக இணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணையப்பதிவேற்றச் சேமிப்பு (Cloud-Integrated Workflow) தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்துதல்.

உலகின் எந்த மூலையில் இருப்பினும், படத்தயாரிப்பாளர்கள் அன்றாடம் பதிவேற்றும் வீடியோ காட்சிகளை உடனடியாக அணுகக்கூடிய, 'காமிராவிலிருந்து இணையச்சேமிப்பு' (camera-to-cloud) என்ற புதியதொரு தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.

முழுமையான ஒருங்கிணைந்த இணைய அமைப்பு, தயாரிப்பு காலக்கெடுக்களை விரைவுபடுத்தி, இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், VFX குழுக்கள், மற்றும் படப்பதிவிற்குப் பிந்தைய தயாரிப்பு விற்பனையாளர்களுக்கு நேரடி ஒத்துழைப்பைச் சாத்தியமாக்குதல்.

ஸ்டூடியோவின் இணைய அடிப்படையிலான VFX மற்றும் தயார்நிலை காட்சிகள் அமைப்பு வழியாக மேம்பட்ட தீர்வை வழங்குகுதல்.

காட்சிகள், கோப்புகள் மற்றும் காட்சிப்படிமங்களின் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தாமதங்களை கணிசமாகக் குறைத்து, திரைப்படக்குழுவின் தயாரிப்புத் திறனை மேம்படுத்துதல் பல்துறை தயாரிப்பு இடங்கள் (Versatile Production Spaces)

பல்வேறு தனித்துவமான தயாரிப்பு அம்சங்கள்:

திரைக்கலைஞர்களின் பல்வேறு படைப்பாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் இடம் தேடல் பகுதி, தொழில்நுட்பத்தேடல் பகுதி, VIP பார்வையிடல் பகுதி, மேம்பட்ட செயல்திறன் பதவிற்கான பகுதிகள், சிமுல்கேம் கட்டமைப்புகள்.

இயக்குநர்கள், நிர்வாகிகள், விருந்தினர்கள் படப்பிடிப்பின் போதே முன்வரிசையில் அமர்ந்து நேரடியாகக் காட்சிகளை காணும் சாத்தியம் மினியேச்சர் ஸ்கேனிங், மினியேச்சர் 3D பிரிண்டிங், காஸியன் ஸ்பிளாட்டிங் தொழில்நுட்பங்களையும் (Gaussian splatting) விரைவில் வழங்குதல். வீடியோக்களில் இருந்து குறைந்த படங்கள் அல்லது கையிருப்பு அசாதாரணமான உண்மை சார்ந்த 3D காட்சிகளை உருவாக்குதல்.

சென்னையின் மையத்தில் உள்ள இரண்டாவது, சிறிய LED மேடையும் நிகரான உயர்தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது. இந்தக்கூடுதல் வசதி குறுகிய வடிவ உள்ளடக்கங்கள், இசை வீடியோக்கள், மற்றும் நிறுவனப்படப்பிடிப்புகளைப் பூர்த்தி செய்யும். அனைத்துத் தரப்பட்ட தயாரிப்புத் திட்டங்களையும் ஆதரிக்கக் கூடியது.

சிறந்த திறன் மற்றும் புதுமைக்கான உலகளாவிய கூட்டுச்செயல்பாடுகள் இந்தியாவில் மெய்நிகர் தயாரிப்பின் தரத்தை உயர்த்துதல்.

உலகின் முன்னணி கணினி காட்சி (visual effects) மற்றும் கைவினை நுட்பங்களை கொண்ட AL தொழில்நுட்ப நிறுவனங்களுடன், பன்னாட்டு வழிநடத்துர்களுடன், பங்குதாரர்களுடன் வகுத்த யுத்திகளைச் செயல்படுத்துதல்.
CG Pro நிறுவனம், உலகளாவிய திறமைகளை அறிமுகப்படுத்துவதுடன் VFX துறையில் நவீனப் பயிற்சியையும் வழங்குவது.

Vu, Dimension5, Cuberic போன்ற AL திரைப்படத்தொழில்நுட்ப நிறுவனங்கள் AI மூலம் உருவாக்கப்படும் பின்னணிகளைக் கொண்டு உள்ளூர்த்தயாரிப்புகளின் தரத்தையும் படைப்பாற்றலையும் பன்னாட்டுத்தரத்திற்கு உயர்த்துவதை உறுதிசெய்தல்.

உலகளாவிய ஸ்டூடியோக்கள் மற்றும் VFX கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு, இந்திய திரைப்படத்தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதில் தீவிரமாகச் செயல்படுதல்.

ARR ஃபிலிம் சிட்டி: ஏஆர்ஆர் திரைப்பட நகரம் - உலகளாவிய தயாரிப்புகளுக்கான ஒரு கலைத்துறை மையம் 

சென்னையின் அருகில் 100 - ஏக்கர் பரப்பளவில் அமைந்த ARR ஃபிலிம் சிட்டி, உள்ளூர் மற்றும் சர்வதேசத்தயாரிப்புகளுக்கான சிறந்த சூழலை வழங்குகிறது. uStream - ஸ்டூடியோவின் உயர்தொழில்நுட்ப மெய்நிகர் தயாரிப்பு மேடையைத் தவிர, ARR ஃபிலிம் சிட்டி, இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் அவர்களால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட உலகத்தரத்திலான இசைப்பதிவு, தயாரிப்புக் கூடத்தையும் கொண்டிருக்கிறது. பாரம்பரிய திரைப்படத்தயாரிப்பு, படப்பிடிப்பு அரங்க உருவாக்கத்திற்குப் பொருத்தமான இரண்டாவது மேடை மற்றும் பல அளவிலான தயாரிப்புக் குழுக்களுக்கான தனிப்பட்ட வசதிகளையும் கொண்டிருக்கிறது.  திரை இயக்குநர்கள் தங்கள் படைப்பாக்கத் திட்டங்களில் முழுமையான கவனம் செலுத்துவதற்கு வழிவகுக்கிறது, இந்தக் கலைமையம். அதே நேரத்தில் சிறந்த தரமான வசதிகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது.

தொழில்நுட்பம், படைப்பாற்றல், ஒத்துழைப்பு, கூட்டு உழைப்பு மனப்பாங்கின் கலவையுடன், uStream இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான கலங்கரை விளக்கமாகச் சுழன்று எரியும்.

uStream பற்றி

uStream, படைப்பாற்றல் பணிகளை முழுமையாகச் செயல்படுத்தும் மெய்நிகர் தயாரிப்பு ஸ்டூடியோ (Virtual Production Studio). திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தீவிரப்படுத்தப்பட்ட XR தீர்வுகளை அளிக்கிறது. ஸ்டூடியோ பல்வேறு திரைச்செயல்பாடுகளை வழங்குகிறது. Al மூலம் மேம்படுத்தப்பட்ட Previz, கலை மற்றும் வடிவமைப்புச் செயல்பாடுகள், மெய்நிகர் உடைமை மேம்பாடு, VFX, DI (டிஜிட்டல் இடைநிலை) ஆகியவை உள்ளடங்கும். uStream Labs மூலமாக, புதிய தலைமுறை மெய்நிகர் தயாரிப்புத்திறமைகளை (Virtual Production Talent) வளர்ப்பதற்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. தற்போதைய LED சுவர் தொழில்நுட்பம், camera-to-cloud வேலைப்பொறி, விரிவுபடுத்தக்கூடிய பிந்தைய தயாரிப்பு தீர்வுகளைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தயாரிப்புகளுக்கான திளைப்பூட்டும், உயர்தர மெய்நிகர்ச் சூழல்களை மகிழ்ச்சியுடனும் மதிப்பார்ந்த பெருமைகளுடனும் வழங்குகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Embed widget