மேலும் அறிய

Chennai metro free travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! யார் யாருக்கெல்லாம்- வெளியான சூப்பர் அறிவிப்பு

Chennai metro free travel: சென்னையில் மெட்ரோ ரயில் மூலம் பல லட்சம் பேர் பயணம் செய்து வரும் நிலையில், இன்று ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி இலவச பயணம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் இலவச பயணம்

சென்னையில் மெட்ரோ ரயில் மூலமாக குறிப்பிட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று சேர முடிகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் பல லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் விளையாட்டு போட்டி, இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் போது மெட்ரோ ரயில் மூலமாக இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகும்.அந்த வகையில் இன்று ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள Nehru Outdoor Stadium வளாகத்தில், இன்று (14.02.2026) "A.R.Rahman's The Wonderment Tour இன்னிசை கச்சேரி" நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

 இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ இரயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் தனித்தனி நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (Event Ticket) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும். பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 14.02.2026 அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு).

இந்தப் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையிலுள்ள எந்தவொரு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை சென்று வரலாம். இதற்கு மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் QR-ஐ ஸ்கேன் செய்யலாம்.

நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு,

  • புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am 15.02.2026),
  • வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am-15.02.2026),
  • பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am- 15.02.2026), புறப்படும்.
  • 10 நிமிடங்களுக்கு பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு முன்னதாகவே புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget