Ponniyin Selvan : குதிரை மூச்சுவிடுவதை கூட ரெக்கார்ட் செய்தோம்... பொன்னியின் செல்வன் படத்தின் சவுண்ட் டிசைனர் யார் தெரியுமா?
இயக்குநர் மணிரத்னத்தின் "அஞ்சலி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் சவுண்ட் டிசைனர்
தமிழ் சினிமாவில் இயக்குநர்களில் ஐகான்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மணிரத்னம். அவருடைய ஒவ்வொரு படைப்புமே சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்கள். அதில் அவரின் முந்தைய ரெகார்டை அவரே தற்போது முறியடித்துள்ளார். இதுவரையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களையும் முந்தியது தற்போது வெளியான காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் :
படத்தின் பக்க பலமாய் இருந்துள்ளார்கள் தொழில்நுட்ப கலைஞர்கள். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தின் சவுண்ட் டிசைனர் ஆக பணிபுரிந்தவர் நம் அனைவருக்கும் பரிச்சயமானவர். இயக்குனர் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்கு பிறகு ஆசை, தளபதி, மே மாதம், சதிலீலாவதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி தான் அந்த சவுண்ட் டிசைனர்.
சவுண்ட் டிசைனர் அவதாரம் :
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறகு சவுண்ட் டிசைனராக அறிமுகமான பிறகு கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படத்திலும் மணிரத்னத்தின் "ஓ காதல் கண்மணியே" திரைப்படத்திலும் சவுண்ட் டிசைனராகவும் இருந்து தற்போது இந்த மாபெரும் பட்ஜெட் படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்திலும் சவுண்ட் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.
View this post on Instagram
பொன்னியின் செல்வன் அனுபவம்:
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பல நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்தார். இது ஒரு வரலாற்று கதை என்பதால் உண்மையில் எப்படி இருந்து என்பது நம்மில் யாருக்குமே தெரியாது. இந்த படத்திற்காக நிறைய நுணக்கமான சவுண்டை ரெகார்ட் செய்ய வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு ஒரு குதிரை மூச்சு விடும் சத்தத்தை கூட ரெகார்ட் செய்ய வேண்டியிருந்தது. இது ஒருத்தர் மட்டுமே செய்ய இயலாத காரியம். அப்படி ஒரு கூட்டு முயற்சி தான் இப்படத்திற்கு இத்தனை பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இது போல பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
சதிலீலாவதி திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு காட்சியில் இவன் பெரிய என்ஜினியராக வருவான் என கூறுவது போல ஒரு டயலாக் இருக்கும். அன்று அவர் சொன்னது இன்று உண்மையாக பலித்துவிட்டது.