Coolie : போட்றா வெடிய...கூலி படம் பற்றி முதல் விமர்சனம் சொன்ன அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தை பார்த்துவிட்டதாகவும் படம் குறித்தும் பேசியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்

கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. சென்னை , ஹைதராபாத் , விசாகப்பட்டினம் , ஜெய்ப்பூர் , பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
கூலி பற்றி அனிருத்
கூலி படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகின. இந்த படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். முன்னதாக ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறு பாடல் காட்சி படத்தில் இருந்து வெளியிடப்பட்டது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூலி படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்
"I have watched the full movie of #Coolie, it's really looking very good & it's a news shade🫰🔥. Want to share my Fire Emoji through this video itself😁. Also I have Vijay Devarakonda's #Kingdom. These are my next immediate releases🤝"
— AmuthaBharathi (@CinemaWithAB) May 3, 2025
- #Anirudhpic.twitter.com/AhBZ4x16ML
" கிட்ட மொத்த படத்தையும் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. வழக்கமாக சமூக வலைதளத்தில் ஃபயர் எமோஜி விடமாட்டேன். அதனால் இப்போதே சொல்லிடுறேன். படம் புதிய ஷேடில் வந்திருக்கிறது. " என அனிருத் தெரிவித்துள்ளார்





















