கீபோர்டு பேக்கிற்குள் தூங்கிய அனிருத்.. அம்மா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் கீபோர்டு பேக்கிற்குள் தூங்கிய அனிருத்தைப் பார்த்து கலங்கிய அம்மா, அவரது கடின உழைப்பு குறித்த மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், இன்று பல கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தனது இசையால் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். ஆனால், அனிருத் தனது ஆரம்ப காலத்தில் இசைக்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை வெளிப்படுத்தும் அவரது அம்மாவின் பழைய பேட்டி தற்போது கவனம் ஈர்க்கிறது.
அந்தப் பேட்டியில் அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்தர் , இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கீபோர்டு பேக்கிற்குள் தூங்கிய அனிருத்
அனிருத் சிறுவயதில் வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்தவர். ஆனால், இசைப் பணிக்காக ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவுக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, ஐந்து, ஆறு நாட்கள் ஆகியும் வீட்டுக்குத் திரும்பாமல் அங்கேயே வேலை செய்துகொண்டிருந்தார். வீட்டில் செல்லமாக வளர்ந்த பிள்ளை இத்தனை நாட்களாக வரவில்லையே, அவனைப் பார்க்க வேண்டும் என்று அவரது அம்மாவுக்குத் தோன்றியுள்ளது.
ஒருநாள் அதிகாலையில் யாரிடமும் சொல்லாமல் தானே வண்டியை எடுத்துக்கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவுக்குச் சென்றுள்ளார். அங்கே வாசலில் இருந்தவர்களிடம், புதியதாக வேலை செய்துகொண்டிருக்கும் தனது மகனைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களும் உள்ளே சென்று பார்க்க அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர் பார்த்த காட்சி அவரை ஒருபுறம் கலங்க வைத்தாலும், மறுபுறம் மகனை நினைத்துப் பெருமைப்பட வைத்துள்ளது. கடுமையான குளிரிலும் அனிருத், கீபோர்டுக்குப் பயன்படுத்தப்படும் ரெக்சின் கவருக்குள் தூங்கிக்கொண்டிருந்தார். அந்தக் கவர் ஒரு ஸ்லீப்பிங் பேக் போல இருந்தது. அதற்குள் உடலைச் சுருக்கிக்கொண்டு, தலை மட்டும் வெளியே தெரியும்படி அவர் தூங்கியுள்ளார்.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது, தனது பிள்ளை இவ்வளவு சிரமப்பட்டு வேலை செய்கிறானே என்ற வேதனையும், முதல் படத்துக்காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறானே என்ற பெருமையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதாக அவரது அம்மா தெரிவித்துள்ளார்.
அனிருத்தின் ஆரம்பகால இசைப் பயணத்தில் இருந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்தச் சம்பவம், அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்துக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பை நினைவூட்டுகிறது.
Today, we see the music, the success, the stadiums and the celebrations. But behind that journey was a young boy who was willing to give everything to his craft. Sometimes, the smallest stories reveal the most about a person. ❤️🙏 #AnirudhRavichander | #3TheMovie https://t.co/b078SCH5GX
— Deathwish (@Avinash251826) October 28, 2026
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்
இதற்கிடையே, அனிருத்தின் திருமணம் குறித்த செய்திகளும் பேசுபொருளாகியுள்ளன. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனை அனிருத் திருமணம் செய்யவிருக்கிறார். நவம்பர் 11 ஆம் தேதி அனிருத் காவ்யா திருமணம் கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























