மேலும் அறிய

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் அனிருத் காவியா மாறன் திருமணம்..தேதி குறித்த ஜோதிடர்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் அனிருத் காவ்யா மாறனுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெயின் நாட்டில் இருவரது திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்திய சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். ரஜினி , கமல் , ஷாருக் கான் , விஜய் , அஜித் , ஜூனியர் என்.டி.ஆர் , அல்லு அர்ஜூன்  என இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார். அனிருத் சராசரியாக ஒரு படத்திற்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளமாக பெற்று இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக உள்ளார்.  மறுபக்கம் 30 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்டை , தர்பார், ஜெயிலர் , கூலி , டிசி , ஜெயிலர் 2 என அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் காவியா மாறன் இருவரும் காதலித்து வருவதாகவும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை

ஸ்பெயினில் திருமணம் 

அனிருத் காவ்யா மாறன் திருமணம் குறித்து இரு வீட்டார் தரப்பிலும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் அனிருத்தின் ஜாதகம் படி அவரது திருமண தேதிக்காக அவரது குடும்பத்தினர் இத்தனை நாள் காத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வரும் நவம்பர் மாதம் அனிருத் காவ்யா மாறன் திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெயினில் பிரம்மாண்டமாக இருவரது திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

திருமணம் குறித்த தகவல்கள் ஒருபக்கம் வெளியானாலும் அனிருத் மற்றும் காவ்யா மாறன் தங்களது திருமணம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அனிருத் பொறுத்தவரை திருமணத்திற்கு எந்த அவசரமும் இல்லாத ஒருவராகவே அவரது பதில்கள் அமைந்துள்ளன. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Embed widget