Drishyam 3 Review : மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்படி இருக்கு...ரசிகர்கள் விமர்சனம் இதோ
Drishyam 3 Review in Tamil : மோகன்லால் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள த்ரிஷ்யம் 3 ஆம் பாகத்தின் முழு விமர்சனம் இதோ

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பான் இந்திய அளவில் கவனமீர்த்த படம் த்ரிஷ்யம் . இப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற நிலையில் இன்று த்ரிஷ்யம் 3 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மீனா , எஸ்தர் அனில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். த்ரிஷ்யம் 3 படத்தைப் பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் என்ன விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
த்ரிஷ்யம் 3 விமர்சனம்
"முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக த்ரிஷ்யம் 3 ஆம் பாகத்தின் கதை தொடங்குகிறது. மெதுவான கதைசொல்லல், வலுவான கதைக்கட்டமைப்பு மற்றும் இரண்டாம் பாதியில் சிறப்பாகப் மறைத்து வைக்கப்பட்ட சஸ்பென்ஸ். சிலவற்றை உங்களால் கணிக்க முடிந்தாலும், படம் நம் கவனத்தை பிடித்து வைத்திருக்கிறது, ஆனால் க்ளைமேக்ஸில் வரும் ட்விஸ்ட் ஒரு 'த்ரிஷ்யம்' கிளைமாக்ஸிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் முழுமையாக அமையவில்லை. ஜார்ஜ்குட்டி உண்மையிலேயே போரை முடிவுக்குக் கொண்டு வந்தாரா, அல்லது மற்றொரு போருக்கான தொடக்கமா என்கிற கேள்வியோடு படம் முடிவுக்கு வருகிறது " என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்
#Drishyam3 Final Review:
— The Review Reel (@TheReviewReel) May 21, 2026
Slow-paced narration with solid story buildup and well-maintained suspense in the second half. Though you can predict some, The film keeps you invested, but the final twists don’t fully land the way you expect from a Drishyam climax. Leaves you wondering…
#Drishyam3 Review: Franchise Dragged Too Far
— M9 NEWS (@M9News_) May 21, 2026
M9 Rating: 2.25/5
Biggest issue with Part 3 is that the legal threat faced by Georgekutty’s family never makes us share their panic or tension.
First half feels largely empty and stretched, second half turns engaging from the…
ட்ரெண்டிங் செய்திகள்





















