Vada Pav: அம்பானி வீட்டு உணவு விருந்து: ‘வடா பாவில் முடி’ - வீடியோவில் அதிர்ச்சி
அந்த வரிசையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் ஓரி கலந்து கொண்டார்.
பாலிவுட்டின் சிறந்த நண்பர் என்று நகைச்சுவையாக அழைக்கப்படுபவர் ஓரி. ஒரு பார்ட்டியில் யார் இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஓரி இல்லாத ஒரு பாலிவுட் பிரபலங்களின் பார்ட்டி என்பது அரிதிலும் அரிது.
அந்த வரிசையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் ஓரி கலந்து கொண்டார். இந்த பிரமாண்டமான நிகழ்வுகளில் ஒன்று இத்தாலியின் போர்டோஃபினோவில் நடந்தது.
இதில் சமீபத்தில் ஓரி பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஆனந்த அம்பானி திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்வுதான் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. விருந்தினர்களுக்கு அமைக்கப்பட்ட உணவு ஸ்டாலை ஓரி பார்வையிட்டு வீடியோ எடுத்துள்ளார்.
அதில் ஒரு ஸ்டாலில் இருந்து மற்றொரு ஸ்டாலுக்குச் சென்று சுவையான உணவுகளை ருசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்வதை வீடியோ காட்டுகிறது.
View this post on Instagram
ஓரியும் டானியா ஷ்ராப்பும் அங்கிருக்கும் உணவுகளை ருசி பார்த்து எப்படி இருக்கிறது என்பது குறித்து பகிர்ந்து கொள்கின்றனர். அப்போது அங்கிருந்த போர்டோஃபினோவின் சிறந்த வடா பாவை ருசி பார்க்கின்றனர். டானியா வாடா பாவை முதலில் கடித்ததும் வாவ் என ருசித்து சாப்பிடுகிறார். அடுத்த கடி கடிப்பதற்குள் தட்டில் முடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.
தொடர்ந்து டானியா, "எனக்கு இன்னொரு கடி வேண்டும். ஆனால் அதில் ஒரு முடி இருக்கிறது" என்று கூறுவதைக் காணலாம்.
இதைத்தொடர்ந்து ஓரியும் டானியாவும் மணாலி ரோல்களை (முட்டை மற்றும் மசாலா சில்லுகளுடன் கூடிய மென்மையான பரந்தாஸ்) பரிமாறும் ஒரு கடைக்கு செல்கின்றனர்.
அம்பானிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் திருமணத்திற்கு முந்தைய பல விழாக்களை நடத்தி வருகின்றனர். ஜாம்நகரில் நடந்த மூன்று நாள் நிகழ்வில் ஷாருக்கான், அமீர் கான் மற்றும் தில்ஜித் டோசன்ஜ், அகான் மற்றும் ரிஹானா ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கிடையில், போர்டோஃபினோ விழாக்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி முழுவதும் மூன்று நாள் பயண நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இருந்தன, அங்கு பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் மற்றும் கேட்டி பெர்ரி நிகழ்ச்சிகள் விருந்தினர்களுக்காக நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.