“தமிழில் நான் கற்ற முதல் வார்த்தை.. பல நேரங்களில் உதவுகிறது” - ஆனந்த் மஹிந்த்ரா சுவாரஸ்ய ட்வீட்
அவர் தமிழில் தான் கற்றுக்கொண்ட வார்த்தை பற்றி இன்று பதிவிட்ட ட்வீட் வைரலாகி உள்ளது.
தனது சுவாராசியமான பல ட்வீட்களுக்காக பெயர் போனவர் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா. அவர் தமிழில் தான் கற்றுக்கொண்ட வார்த்தை பற்றி இன்று பதிவிட்ட ட்வீட் வைரலாகி உள்ளது.
அதுகுறித்த அவரது ட்வீட்டில் ,’நான் பள்ளிக்கூடம் படித்ததெல்லாம் தமிழ்நாட்டில்தான். அதனால் இந்த ஒரு சொல்லைதான் நான் முதலில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு அடிக்கடி இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் உரக்கவும் சொல்லியிருக்கிறேன். சிலசமயம் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.
ஆங்கிலத்தில் நாம் சொல்ல வரும் பல வார்த்தையை தமிழில் மிக சிறப்பாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும் என்பதைக் குறிப்பிட்டிருந்த அவர், ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தைக் கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. அதனால் என்னை சற்று தனியே விடுங்கள்’ எனச் சொல்வதை தமிழில் ‘போடா டேய்!’ என முடித்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் கூடுதலாக தமிழில் நிறையவே கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டதாகவும் அது தனக்கு கார் ஓட்டும்போது குறிப்பாக தனது தார் வண்டிக்கு குறுக்கே யாரேனும் சென்றால் திட்டுவதற்கு வசதியாக இருப்பதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
Having done my schooling in Tamil Nadu I confirm that this Tamil phrase is the one I learned first, used the most often and have used consistently on many occasions throughout my life. Sometimes loudly, but usually under my breath… 😊 pic.twitter.com/9xU835ntix
— anand mahindra (@anandmahindra) January 14, 2022
Sadly, too many! Many phrases that would come in handy if someone ever collided with my Thar in Chennai.. https://t.co/rlCOfh5J1B
— anand mahindra (@anandmahindra) January 14, 2022
முன்னதாக, ட்விட்டர் தளத்தில் ஒருவர் அண்மையில் ஆனந்த் மஹிந்திராவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில்,”இது சற்று முட்டாள்தனமான கேள்விதான். இருந்தாலும் பரவாயில்லை நான் கேட்கிறேன். நீங்கள் ஒரு பஞ்சாபிதானே சார்? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் அந்த கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா அதிரடியான பதிலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Not a stupid question but my straight answer is that I’m an Indian.. https://t.co/MrrmP9cGuE
— anand mahindra (@anandmahindra) January 8, 2022